லஞ்ச ஒழிப்பு போலீஸ் 'ரெய்டு' அரசு அதிகாரி வீட்டில் ரூ.50 லட்சம் பறிமுதல்:சொத்து ஆவணங்கள் சிக்கின !!

ஓய்வு பெற்ற, நெடுஞ்சாலைத் துறை தலைமை பொறியாளர் வீட்டில், லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில், 50 லட்சம் ரூபாய் மற்றும் சொத்து
ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.


சேலத்தை சேர்ந்தவர், ஜெயராமன். தமிழக நெடுஞ்சாலை துறையில், கட்டுமானம் மற்றும்

பராமரிப்பு பிரிவில், தலைமை பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.இவர், பணியில் இருந்தபோது, அதிகார துஷ்பிரயோகம் செய்து, 1,500 கோடிரூபாயை, வேறு பணிகளுக்கு ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதற்கு கமிஷனாக பெற்ற, 36 கோடி ரூபாயில், சேலம், கடலுார் உள்ளிட்ட பகுதிகளில்,சொத்துகள் வாங்கி குவித்துள்ளார் என, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசில், புகார் அளிக்கப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்திலும், இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது. அதில், 'ஜெயராமன் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தி, உண்மையை கண்டறிய வேண்டும்' என, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

இதன்படி, ஜெயராமனுக்கு சொந்தமான, சென்னை
கே.கே.நகர் மற்றும் சேலம் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, 50 லட்சம் ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படு கிறது. தொடர்ந்து, விசாரணை நடக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...