தினமலர்' செய்தி எதிரொலி : தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில் இன்று நடக்கிறது சிண்டிகேட் கூட்டம் !!

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், இன்று சிண்டிகேட் கூட்டம் நடக்கிறது. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், துணைவேந்தர், உயர்கல்வி செயலர், பதிவாளர் உட்பட, 13 பேர், சிண்டிகேட் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.

மாதந்தோறும், சிண்டிகேட் கூட்டம் நடத்த வேண்டும்; தவறினால், மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது,
கட்டாயம் கூட்ட வேண்டும். ஆனால், ஏப்ரலுக்கு பின், சிண்டிகேட் கூட்டம் நடத்தப்படவில்லை. இது குறித்து, நமது நாளிதழில், சமீபத்தில் செய்தி வெளியானது. இதையடுத்து, சிண்டிகேட் கூட்டத்தை நடத்த, பல்கலை நிர்வாகத்திற்கு, உயர்கல்வித் துறை உத்தரவிட்டது. தொடர்ந்து, இன்று மாலை, 4:00 மணிக்கு, சிண்டிகேட் கூட்டம் நடத்தப்படுகிறது.

பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., நிபந்தனைப்படி, வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில், பல்கலையின் கல்வி மையங்கள் இருக்கக் கூடாது. எனவே, தமிழ்நாடு பல்கலைக்கு, வெளிநாட்டில் உள்ள கல்வி மையங்கள் ரத்து செய்யப்பட உள்ளன. பல்கலை பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பதவிக்கான வயது வரம்பு குறித்தும், புதிய விண்ணப்பத்தை, கவர்னருக்கு அனுப்புவது குறித்தும், காலியாக உள்ள தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடத்தை நிரப்புவது குறித்தும், கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...