ரேஷன் பொருட்களின் அளவு குறைப்பு மாதந்தோறும் ரூ.56 கோடி 'ஸ்வாகா!!

ரேஷன் கடைக்கு பொருட்களை, குறைந்த அளவு வழங்குவதன் மூலம், மாதந் தோறும், 56 கோடி ரூபாய்க்கு முறைகேடு நடப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில், ரேஷன் கடைகளுக்கு, 'பாயின்ட் ஆப் சேல்' எனும், கருவி
வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கார்டுக்கும் பில் போடும்போது, பதிவு செய்யப்பட்ட ரேஷன் கார்டுதாரரின், மொபைல் எண்ணுக்கு, 'எஸ்.எம்.எஸ்.,' செல் லும் வகையில், திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

இதனால், பொருட்கள் வினியோகத்தில், ஊழியர்கள் முறைகேடு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது. அதே வேளையில், ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்யப்படும் பொருட் களின் எடை, குறைவாக இருப்பது பூகம்பத்தை கிளப்பியுள்ளது.

ரேஷன் கடைகளில் இருப்பு குறையும்போது, ஊழியர்களுக்கு அபராதம் |உள்ளிட்ட துறை
ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனால், பொருட்களின் எடை குறைவாக இருக் கும் விவகாரத்தில், அதிகாரிகள் அடிக்கும் கொள்ளையை, ரேஷன் ஊழியர்கள் அம்பலப் படுத்தியுள்ளனர்.

ரேஷன் கடை பணியாளர்கள் கூறியதாவது:


நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் இருந்து, அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, உளுந் தம் பருப்பு, பாமாயில் போன்ற பொருட்கள், ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படுகிறது.அந்த மூட்டை களில், ஒரு கிலோ முதல், மூன்று கிலோ வரை குறைவாக இருப்பது வாடிக்கையாகி விட்டது. எடை குறைவாக இருப்பதை, பலமுறை சுட்டிக்காட்டியும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.

மூட்டைக்கு, ஒரு கிலோ என்பது சிறிய அளவாக இருந்தாலும், இதன் மூலம் மாதாமாதம் பெரும் தொகைக்கு முறைகேடு நடக்கிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.


'கை நனைப்பது' யார்?


தமிழ்நாடு அரசுநியாய விலை கடை பணியாளர் சங்க மாநில தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது:

ஒரு கடையில், 1,000 கார்டுகள் இருந்தால், அந்த கடைக்கு அனுப்பப்படும் அரிசி, சர்க்கரை, கோதுமை, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்புஎன, அனைத்தின் எடையும் ஒரு கிலோ குறைவதன் மூலம், கடைக்கு, 13 ஆயிரத்து, 550 ரூபாய் ஊழல் நடக்கிறது.
கோவை மாவட்டத்தில், 1,300 ரேஷன் கடை களுக்கு கணக்கிடும்போது, மாதம், 1.75 கோடி ரூபாய் ஊழல் நடக்கிறது. எடை குறைவு அதி கரிக்கும் போது, ஊழல் தொகையும் உயரும்.

மாநிலம் முழுதும் இதே நிலை தான் உள்ளது. பொது வினியோக திட்ட பொருட்களை சமச்சீர் செய்து வழங்காமல், மாநிலம் முழுவதும், ஒவ்வொரு மாதமும், 56 கோடி ரூபாயும், ஆண்டுக்கு, 672 கோடி ரூபாயும் ஊழல் நடக்கிறது.

இவ்வளவு பெரிய தொகையில் யாரெல்லாம், 'கை நனைக்கின்றனர்' என்பது தெரியவில்லை. பிரதிபலன் இருப்பதால், முறைகேட்டை சீர் படுத்தாமல்,அதிகாரிகள் குளிர் காய்கின்றனர். இவ்வாறு ராஜேந்திரன் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...