மத்திய குழு தமிழகம் வந்தது: இன்று ஆய்வு!!!

செல்லாத நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கியதால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய, மத்திய குழு தமிழகம் வந்ததுள்ளது. இக்குழு, வேலுார், கோவை மற்றும் திருச்சி
மாவட்டங்களில் இன்று ஆய்வு செய்கிறது.

'பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, நவ., 8 இரவு, மத்திய அரசு அறிவித்தது. அதனால் ஏற்பட்ட விளைவுகள் குறித்து கள ஆய்வு செய்வதற்காக, நவ., 19ல், பிரதமர் மோடி, 27 குழுக்களை அமைத்தார்.

இதில், மூன்று பேர் கொண்ட குழு, நேற்று, தமிழகம் வந்தது. இதில், மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சி துறை கூடுதல் செயலர், மனிதவள மேம்பாட்டுத் துறை இணை செயலர் மற்றும் மத்திய நகர்ப்புற வளர்ச்சி துறை துணை செயலர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இது குறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:


மத்திய குழுவினர், சென்னை ரிசர்வ் வங்கியில்,
பிராந்திய இயக்குனர் மற்றும் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளின் உயர் அதிகாரிகள் மற்றும் அஞ்சல் துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, 100 ரூபாய், 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கம்; பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற, வங்கிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள்; ஏ.டி.எம்., மையங்களில், புதிய நோட்டுகளை வினி
யோகிக்க, செய்யப்படவேண்டிய மாற்றங்கள்; அஞ்சலகத்தில் நடைபெறும் மாற்றங்கள் குறித்தும் கேட்டறிந்தனர்.

சில வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்., மையங்களுக்கு சென்று பார்த்தனர். பின், தலைமைச் செயலகத் தில், உயர் அதிகாரிகளை சந்தித்து பேசினர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மூன்று மாவட்டங்களில் இன்று நடக்கிறது ஆய்வு

தமிழகம் வந்துள்ள குழுவில் உள்ளோர், இன்று, கோவை, வேலுார், திருச்சி மாவட்டங்களுக்கு, தலா ஒருவர் செல்கின்றனர். மாவட்ட கலெக்டர், வங்கி அதிகாரிகள் மற்றும் அஞ்சல் துறையினருடன் ஆலோசனை நடத்திவிட்டு, டில்லி புறப்படுகின்றனர். இக்குழு, வரும், 25ம் தேதி, கள ஆய்வு அறிக்கையை, மத்திய அரசிடம் ஒப்படைக்க உள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...