ஒரு கிலோ ரூ.700 வரைக்கும் விற்பனை உப்பு தட்டுப்பாடு புரளியால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது!!

புதுடெல்லி, உப்பு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புரளி பரவியதால் வட மாநிலங்களில் பதற்றம் ஏற்பட்டு உள்ளது. ஒரு கிலோ உப்பு ரூ.700 வரைக்கும் விற்கப்படுகிறது. உத்தரபிரதேசத்தில் உப்பு வாங்க சென்று பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என

அறிவித்ததைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் பால், சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. பல இடங்களில் உப்பு கிடைக்காமல் மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.மக்கள் போராட்டம் இதனால் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக வட மாநிலங்களில் புரளி பரவியது. உடனே சிறிது இருப்பு வைக்கப்பட்டு இருந்த கடைகளிலும் உப்பு அதிகமான விலைக்கு விற்கப்பட்டது. நேற்றுமுன்தினம் மதியம் வழக்கமான விலையான ரூ.25–க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ உப்பு, மாலையில் ரூ.50 ஆகவும், இரவில் ரூ.250–ஆகவும் விற்கப்பட்டது.உப்பு தட்டுப்பாடு புரளியால் ஆத்திரமடைந்த டெல்லி ஜாமியா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். அப்போது போலீசாரின் பஸ் உள்பட 2 பஸ்கள் சேதப்படுத்தப்பட்டன. இதில் 4 போலீசாருக்கு காயம் ஏற்பட்டதால் அங்கு பதற்றம் நிலவி வருகிறது.போலீசார் தடியடி இதைப்போல உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளிலும் உப்பு தட்டுப்பாடு புரளி பரவியது. அங்குள்ள ராம்பூர், பரேலி, மொராதாபாத் உள்ளிட்ட பகுதிகளில் ஒரு கிலோ உப்பு ரூ.500–க்கு விற்கப்பட்டது. இதனால் மக்கள் இரவு நேரம் என்றும் பாராமல் மளிகைக்கடைகளை முற்றுகையிட்டனர். இவ்வாறு குவிந்த பொதுமக்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால் பதற்றம் ஏற்பட்டது.கான்பூரில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு உப்பு வாங்க சென்ற சவிதா (வயது 52) என்ற பெண்ணை, கடையில் நின்றிருந்த மற்றவர்கள் பிடித்து கீழே தள்ளினர். இதில் வாய்க்காலில் தவறி விழுந்த அந்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.மீரட், இடாவா, லக்னோ, ஆக்ரா, முசாபர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் உப்பு பதுக்கலை கண்டறிய போலீசாரும், பொது வினியோகத்துறை அதிகாரிகளும் சோதனை நடத்தினர். அப்போது உப்பு பதுக்கியதாக கண்டறியப்பட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.மும்பை, ஐதராபாத் இதற்கிடையே உப்பு தட்டுப்பாடு புரளி மும்பை மற்றும் புறநகர் பகுதிகளிலும் வெகுவாக எதிரொலித்தது. மும்பையின் கிழக்கு பகுதி மற்றும் சிவாஜிநகர், கோவண்டி உள்ளிட்ட பல பகுதிகளில் சில வியாபாரிகள் ஒரு கிலோ உப்பை ரூ.700–க்கு விற்பனை செய்தனர். இதை தடுக்க முக்கியமான பகுதிகளில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.இதைப்போல ஐதராபாத் சந்தைகளிலும் உப்புக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சமூக வலைத்தளங்களில் புரளி கிளம்பியது. ஆனால் இதை மறுத்த போலீஸ் அதிகாரிகள், தேவையான உப்பு கையிருப்பில் இருப்பதாகவும், புரளி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனர். நாட்டின் பிற பகுதியிலும் இந்த உப்பு தட்டுப்பாடு புரளியானது பரவிஉள்ளது, அங்கும் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டு உள்ளது.முதல்–மந்திரிகள் அறிவிப்பு இவ்வாறு நாட்டின் பல பகுதிகளில் பரவி வரும் உப்பு தட்டுப்பாடு புரளியை மத்திய அரசும், சம்பந்தப்பட்ட மாநில முதல்–மந்திரிகளும் கடுமையாக மறுத்துள்ளனர். மக்களுக்கு தேவையான அளவு உப்பு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக கூறிய அவர்கள், மக்கள் யாரும் பதற்றம் அடைய வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...