70 ஆண்டுகாலமாக ஊழல் செய்தவர்களால் தம்முடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக பிரதமர் மோடி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவா தலைநகர் பனாஜியின் சர்வதேச விமான நிலையத்துக்கு இன்று அடிக்கல் நாட்டி பிரதமர் மோடி பேசியதாவது:
நான் அகந்தைக்காக ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கவில்லை. மக்களின் துயரம் எனக்கு புரிகிறது. கருப்பு பணத்தை ஒழிக்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
அதிகாரத்தில் அமர்ந்திருக்க வேண்டும் என்பதற்காக நான் பிறக்கவில்லை.
இந்த நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்பதற்காக என்னுடைய குடும்பத்தை, வீட்டை விட்டு வெளியே வந்திருக்கிறேன் (கண்கள் கலங்கியபடி பேசினார்).
Source: tamil.oneindia.com
இன்னொரு முகம்...
ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் மக்கள் 2014-ம் ஆண்டு எனக்கு வாக்களித்தார்கள். டிசம்பர் 30-ந் தேதிக்குள் பணத்தை பதுக்கியவர்கள் அபராதத்துடன் வங்கியில் செலுத்தாவிட்டால் என்னுடைய இன்னொரு கடுமையான முகத்தை காட்ட நேரிடும்.