தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சிகளில் வரி செலுத்த அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று மக்களிடம் அறிவுறுத்தினாலும், குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை இணைப்புகளை துண்டித்தாலும் வரி செலுத்த தயங்குவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என
அறிவிக்கப்பட்டதன் எதிரொலியாக, மக்களிடம் இருந்த பழைய நோட்டுகள் நேற்று முன்தினம் மாநகராட்சிகளில் வரியாக ஏற்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி வரி வசூல் மையங்களில் கோடிக்கணக்கான ரூபாய் குவிந்தது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து மற்றும் தொழில் வரியை செலுத்த, சென்னை மாநகராட்சி 446 கவுன்ட்டர்களை நேற்று திறந்தது. இன்றும் இந்தக் கவுன்ட்டர்கள் செயல்படும் நிலையில், நேற்று ஒரே நாளில் ரூ.7.21 கோடி வரி வசூலாகியுள்ளது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் தா.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “மத்திய அரசு கடந்த 8ஆம் தேதி ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்தது. இருப்பினும் பொதுமக்கள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு செலுத்தவேண்டிய வரிகளை செலுத்துவதில் உள்ள சிரமங்களை கருத்தில் கொண்டு பழைய ரூபாய் 500, 1000 நோட்டுகள் மூலம் செலுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனையடுத்து பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சொத்துவரி, தொழில்வரி மற்றும் இதர வரிகளை செலுத்த சிறப்பு முகாம்கள் நேற்று நடத்தப்பட்டது. இதற்காக 446 சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டது. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நேற்று ஒரே நாளில் ரூ.7 கோடியே 21 லட்சம் வசூல் செய்யப்பட்டது.
இந்த திட்டத்திற்கு பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ள நல்ல வரவேற்பை தொடர்ந்து, இன்றும் (திங்கட்கிழமை) வரிகளை செலுத்த ஏதுவாக, சிறப்பு கவுன்ட்டர்கள் செயல்படும். வழக்கமாக காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை செயல்படும் இந்த கவுன்ட்டர்கள், இன்று மட்டும் மாலை ஆறு மணிக்கு பிறகும் செயல்படும்”. இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.