10ஆம் தேதி முதல் நேற்று (13ஆம் தேதி) வரை நான்கு நாட்களில் மட்டும் வங்கிகளில் ரூ.3 லட்சம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் வங்கிகள் மூலம் மக்களுக்கு ரூ.50,000 கோடி வழங்கப்பட்டு இருக்கிறது. ரூபாய் 500, 1000 நோட்டுகளை செல்லாது என்று கடந்த 8ஆம் தேதி அறிவித்த பிரதமர் மோடி, மக்கள் தங்கள் கைகளில்
இருக்கும் இத்தகைய நோட்டுகளை டிசம்பர் 30ஆம் தேதி வரை வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் கூறினார். அதேநேரம் வங்கிகளில் இருந்த மேற்படி நோட்டுகளை மாற்றிக்கொள்ளவும், ரூபாய் 50, 100 போன்ற சிறிய தொகைகளுக்கான கூடுதல் நோட்டுகளை இருப்பு வைப்பதற்காகவும் 9ஆம் தேதி வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
ஒருநாள் விடுமுறைக்குப்பின் 10ஆம் தேதி வங்கிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டன. அன்று முதல் வங்கிகளை பொதுமக்கள் மொய்த்து வருகின்றனர். தங்களிடம் இருக்கும் ரூபாய் 500, 1000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளவும், டெபாசிட் செய்யவுமாக மக்கள் வங்கிகளுக்குச் சென்று வருகின்றனர். தங்கள் அடையாள அட்டைகளை காட்டி ரூ.4,000 வரை பணம் மாற்றி வருகின்றனர். இது ரூபாய் 50, 100 போன்ற சிறிய தொகைக்கான நோட்டுகளாகவும், ரூபாய் 2000 புதிய நோட்டாகவும் வழங்கப்படுகிறது. இதைப்போல தங்கள் கணக்குகளில் இருந்து பணம் எடுக்க விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு ரசீதுகள் மூலம் ரூ.10,000 வரை பணமும் எடுத்துச் செல்ல முடிகிறது.
இந்நிலையில் கடந்த 10ஆம் தேதி முதல் 13ஆம் தேதி மாலை ஐந்து மணி வரை நாடு முழுவதும் உள்ள வங்கிகளில் ரூ.3 லட்சம் கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் 500, 1000 நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டு இருப்பதாகவும் வங்கிகள், ஏடிஎம்கள் மூலம் ரூ.50,000 கோடி வழங்கப்பட்டு இருப்பதாகவும் மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு கடந்த 10ஆம் தேதி முதல் தொடர்ந்து பணத்தை மாற்றி வரும் பொதுமக்களின் வசதிக்காக அனைத்து நடவடிக்கைகளும் வங்கிகள் எடுத்து வருவதாக இந்திய வங்கிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதைப்போல ஏடிஎம்கள் அனைத்தும் புதிய ரூபாய் 500, 2000 நோட்டுகளை கையாளும் வகையில் ஏடிஎம்கள் மாற்றியமைக்கப்பட்டு வருவதாகவும், அந்த சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் பண பரிமாற்றத்துக்கு கிரெடிட், டெபிட் கார்டுகளையும், நெட்பேங்கிங் போன்ற எலெக்ட்ரானிக் பரிமாற்ற நடைமுறைகளையும் பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களையும் இந்திய வங்கிகள் சங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.