746 தனியார் பள்ளிகளுக்கு ஆபத்து!!!

அங்கீகாரம் இல்லாமல் நடத்தப்படும் பள்ளிகளால், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இந்தியாவில் இயங்கும் அனைத்து தனியார் பள்ளிகளும், அந்தந்த மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றே இயக்கப்பட வேண்டும். மாநில அரசு நிர்ணயிக்கும், விதிமுறைகளை நிறைவேற்றும் வகையில் இருந்தால் மட்டும்ே அந்த அங்கீகாரம் பள்ளிகளுக்கு

வழங்கப்படும்.இந்நிலையில், அங்கீகாரம் இல்லாத 746 பள்ளிகளில், ஆய்வு நடத்த பள்ளிக்கல்வி துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2004ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 16 ஆம் தேதி கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளியில் போதிய பாதுகாப்பு வசதி இல்லாததால் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. அதில், 94 குழந்தைகள் உடல் கருகி இறந்தனர். அந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

அதைத் தொடர்ந்து, பள்ளி கட்டிடங்களின் வரைமுறைகளை ஆய்வு செய்ய வேண்டும் என்றும் பாதுகாப்பு இல்லாத கட்டிடங்களில் இயங்கும் பள்ளிகளுக்கு சீல் வைக்க வேண்டும் எனவும் அரசு உத்தரவிட்டது. எனவே, பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் அங்கீகாரம் இல்லாமல் பல பள்ளிகள் செயல்படுவதாக புகார்கள் எழுந்ததைத் தொடர்ந்து, அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை ஆய்வு செய்ய உத்தரவிடப்படடது. ஆய்வின் முடிவில், சுமார் 746 பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், 746 பள்ளிகளையும் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், மேற்கண்ட 746 அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை ஆய்வு செய்து, நவம்பர் 7 ஆம் தேதி அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு, அறிக்கையை தாக்கல் செய்தது. அறிக்கையை பரிசீலித்த உயர்நீதிமன்றம், தமிழக அரசின் அறிக்கையை நிராகரித்தது.

மேலும், அங்கீகாரம் இல்லாத 746 தனியார் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு நடத்தி டிசம்பர் 20ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வி துறைக்கு, உத்தரவு பிறப்பித்துள்ளது. அதில், அரசு அதிகாரிகள் குழுவில் 3 கல்வியாளர்களை சேர்க்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் 746 பள்ளி கூடங்களும், விதிமுறைகளை நிறைவேற்றி கொள்ள வசதியாக கால அவகாசம் கொடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, தற்காலிக அங்கீகாரத்தை கொண்டு அவை இயங்கி வந்தன. ஆனால், விதிமுறைகளை நிறைவேற்ற வேண்டி அரசு வழங்கிய கால அவகாசத்தில், அவற்றை நிறைவு செய்ய பள்ளிகள் தவறி விட்டன. 746 பள்ளிகளையும் சீல் வைத்து மூட நேரிட்டால் சுமார் 5 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...