முக்கிய வேட்பாளர்கள் தகுதி நீக்கம் நீதிபதிகள் கேள்வி!!

அரவக்குறிச்சி அதிமுக வேட்பாளராக செந்தில்பாலாஜியும், திமுக வேட்பாளராக கே.சி.பழனிசாமியும் போட்டியிடுகின்றனர். அதுபோல தஞ்சையில் அதிமுக வேட்பாளராக ரெங்கசாமி போட்டியிடுகிறார். இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கரூரைச் சார்ந்த சாதிக் அலி என்பவர் சென்னை

உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “ஏற்கனவே அரவக்குறிச்சி, தஞ்சை வேட்பாளர்கள் மீது பணப்பட்டுவாடா குற்றச்சாட்டு உள்ள நிலையில் மீண்டும் அவர்களையே வேட்பாளர்களாக ஆக்கியிருப்பது ஏமாற்றமளிக்கிறது. மக்களிடம் நம்பிக்கையை இழந்துவிட்ட இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்” என மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு இன்று தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், மகாலிங்கம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள் தேர்தல் கமிஷனை நோக்கி, “இந்த வேட்பாளர்களை ஏன் தகுதி நீக்கம் செய்யக் கூடாது என மனுதாரர் கேட்கிறார். தேர்தல் ஆணையம் தகுதி நீக்கம் செய்ய வேண்டியது தானே?” என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த தேர்தல் கமிஷன், “குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டாலே அவரை தகுதி நீக்கும் அதிகாரம் எங்களுக்கு இல்லை. ஒருவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மட்டுமே அவரை தகுதி நீக்கம் செய்ய முடியும்” என்றது.

“இதுபோன்ற வழக்குகள் இனியும் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்கிற நிலையில், தேர்தல் கமிஷன் இது தொடர்பாக சட்ட ஆணையத்தோடு கலந்துரையாடி குற்றப்பத்திரிகை தாக்கல் செயப்பட்டால் அந்த விவகாரங்களில் என்ன நடவடிக்கை எடுப்பது என்று புதிய முடிவுகளுக்கு வர வேண்டும்” என்று இந்த வழக்கை சில மணி நேரங்களுக்கு ஒத்தி வைத்தனர். இதே கோரிக்கையுடன் பலரும் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்திருக்கும் நிலையில், அந்த மனுக்கள் அனைத்தும் ஒரே மனுவாக விசாரிக்கப்படலாம் என்று தெரிகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...