எம்.டி., சித்தா கலந்தாய்வு 88 இடங்களும் நிரம்பின!!!

அரசு சித்த மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., படிப்புக்கான கலந்தாய்வில், 88 பேருக்கு இடங்கள் கிடைத்தன.

தமிழகத்தில், சென்னை மற்றும் நெல்லையில் உள்ள, சித்த மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., படிப்பில், 94 இடங்கள் உள்ளன. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு, ஆறு இடங்கள் போக,
மீதமுள்ள, 88 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, சென்னை, அரும்பாக்கம் சித்த மருத்துவ கல்லுாரியில் நேற்று நடந்தது.

இதற்கு, 291 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். துவங்கிய சிறிது நேரத்தில், 88 இடங்களும் நிரம்பின. இடங்கள் ஒதுக்கீடு பெற்றோர், அங்கேயே அசல் சான்றிதழ்களை கொடுத்து, கல்லுாரியில் சேர்ந்தனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...