தீயணைப்பு துறையில் 4,200 பணியிடங்கள் காலி : அன்றாட பணிகளுக்கே திணறல்!!

தீயணைப்பு துறையில், மாநிலம் முழுவதும், 4,200 பணியிடங்கள் காலியாக உள்ளதால், அன்றாட பணிகளுக்கே திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், தீயணைப்பு துறைக்கு புதிதாக ஆட்கள் எடுப்பதில், அரசு கவனம் செலுத்தாததால், பணியாளர்கள் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.

மாநிலம் முழுவதும், 4,200 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், அன்றாட பணிகளுக்கே, துறை திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து, தீயணைப்பு துறையினர் கூறியதாவது: தீயணைப்பு துறையில் உள்ள காலி பணியிடத்தை கணக்கிட்டு, அதற்கான தேர்வு நடத்தி, ஆட்களை நியமிப்பதில்லை. காவல் துறைக்கு தேர்வு செய்யப்படுவோரில் சிலர், இங்கு நியமிக்கப்படுகின்றனர்.
ஏழு ஆண்டுகளில், 3,000க்கும் குறைவான ஆட்களே, தீயணைப்பு துறைக்கு எடுக்கப்பட்டு உள்ளனர். 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு நிலையங்கள், ஐந்து பேர் கூட இல்லாமல் செயல்பட்டு வருகின்றன; ஊழியர்கள் விடுப்பு எடுக்கமுடியவில்லை.

மாநிலம் முழுவதும், தற்போது, 4,200 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆறு ஆண்டுகளில், மாவட்டத்திற்கு நான்கு புதிய தீயணைப்பு நிலையங்கள் துவங்கப்பட்டன;
அவற்றுக்கு பணியாளர்கள் நியமிக்கவில்லை. 2018க்குள், 40 சதவீதம் பேர் ஓய்வு பெறுவர். எனவே, தீயணைப்பு துறையில், தேவைக்கேற்ப பணியாளர்களை, நேரடியாக நியமித்தால், பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...