முதல்வர் ஜெ., பிரத்யேக அறைக்கு திங்கட்கிழமை மாற்றம் !!

வழக்கமான உணவுகளை உட்கொள்ள துவங்கியுள்ள, முதல்வர் ஜெயலலிதா, திங்கட்கிழமை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து, பிரத்யேக அறைக்கு மாற்றப்பட உள்ளார்.

உடல் நலக் குறைவு காரணமாக, முதல்வர் ஜெயலலிதா, செப்., 22 இரவு, சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைவு காரணமாக, அவர் அனுமதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.



நுரையீரல் தொற்று


ஓரிரு நாளில், அவர் வீடு திரும்பி விடுவார் என எதிர்பார்த்த நிலையில், அவரது நுரையீரலில் தொற்று ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை அளிக்க, லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே வரவழைக்கப்பட்டார். அவருடன், டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவர்கள் மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் இணைந்து, முதல்வருக்கு சிகிச்சை அளித்தனர்.


பிசியோதெரபி சிகிச்சை


தொடர் சிகிச்சை காரணமாக, முதல்வரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 40 நாட்களுக்கும் மேலாக, படுக்கையில் இருந்தபடி, சிகிச்சை பெற்றுள்ளதால், கை, கால்களை அசைக்க, பிசியோதெரபி சிகிச்சை தரப்படுகிறது. அந்த சிகிச்சையை, சிங்கப்பூரில் இருந்து வந்த, இரண்டு பெண் மருத்துவர்கள் அளித்து வருகின்றனர்.


வீட்டு உணவு உண்கிறார்


நுரையீரல் தொற்று குணமாகி உள்ள நிலையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட, செயற்கை சுவாசம் அவ்வப்போது நிறுத்தப்பட்டு, இயற்கையாக சுவாசிக்க, பயிற்சி அளிக்கப்படுகிறது. கடந்த சில தினங்களாக, அவர் வழக்கமாக உண்ணும் உணவுகளை சாப்பிடுகிறார்.

வீட்டில் இருந்து அவருக்காக பிரத்யேகமாக தயாரித்து எடுத்து வரப்பட்ட, கிச்சடியை விரும்பி உண்பதாக, மருத்துவர்கள் தெரிவித்தனர். அவர் விரும்பும் உணவுகளை, மருத்துவமனையிலும் தயாரித்து வழங்குகின்றனர். படுக்கையில் இருந்தபடியே, 'டிவி' பார்க்கிறார்.


பிரத்யேக அறைக்கு மாற்றம்


அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் உள்ள, விநாயகர் கோவிலில், திங்கட்கிழமை காலை, 6:00 மணியில் இருந்து, 7:00 மணிக்குள், கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகம் முடிந்ததும், ஜெயலலிதா தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து, பிரத்யேக அறைக்கு மாற்றப்படுகிறார்.

தற்போது, மூன்றாவது தளத்தில் உள்ள, தீவிர சிகிச்சை பிரிவில் ஜெயலலிதா இருக்கிறார். அவருக்காக பிரத்யேகமாக, இரண்டாவது தளத்தில், புதிய அறை தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த அறைக்கு, புதிதாக வர்ணம் பூசப்பட்டுள்ளது. அந்த வாசனை தெரியாமலிருக்க, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, அறை தயார் நிலையில் உள்ளது.

அந்த அறையில், அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளன. பிரத்யேக அறைக்கு மாற்றப்பட்ட ஒரு வாரத்தில், அவருக்கு, சுவாசம் சீராக இருப்பதற்காக, தொண்டையில் பொருத்தப்பட்டுள்ள குழாய் அகற்றப்படும். பின், சிங்கப்பூர் மருத்துவர்கள், அவருக்கு நடைபயிற்சி அளிக்க உள்ளனர்.

அதற்கான இட வசதியுடன், புதிய அறை ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. நன்கு நடக்கத் துவங்கியதும், 10 நாளில், அவர் வீடு திரும்புவார் என, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...