தடை செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை வரவேற்கும் பள்ளி!

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு அறிவிப்புக்கு பின், மக்கள் இதுவரை கண்ணில் ஒற்றிக்கொண்டிருந்த ரூபாய் 500,1,000 நோட்டுகளை தற்போது தூக்கி எறியும் மற்றும் எரிக்கும் நிலைமைக்கு வந்துவிட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு இளைஞர் பிச்சைக்காரர் ஒருவருக்கு பழைய ரூபாய் 500 நோட்டை கொடுத்தபோது, ‘அது எனக்கு

வேண்டாம்’ என்று பிச்சைக்காரர் சொல்லும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது நினைவில் இருக்கலாம். இந்நிலையில், பெங்களூருவில் உள்ள பள்ளி ஒன்று செல்லாத ரூபாயில் பள்ளி கட்டணத்தை செலுத்தலாம் என்று பெற்றோர்களுக்கு தெரிவித்துள்ளது.

பெங்களூரு மகதி சாலையில் வி.இ.எஸ், மாடல் கன்வெண்ட் என்ற பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளி நிர்வாகம் கடந்த 24ஆம் தேதி மாணவர்கள் மூலம் பெற்றோர்களுக்கு வியப்பை ஏற்படுத்தும் ஒரு சுற்றிக்கையை அனுப்பியது. அந்த சுற்றிக்கையில் கூறியிருப்பதாவது: “பெற்றோர்களே… பத்தாம் வகுப்பு வரை உங்கள் பிள்ளைகளின் வருங்கால படிப்புக்கான கட்டணத்தை இப்போதே செலுத்தலாம். அதுவும், மத்திய அரசால் செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாயில் செலுத்தலாம். மேலும், முதலில் வருபவர்களுக்கு சலுகையும் அளிக்கப்படும்” என்று தெரிவித்திருந்தனர்.

இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, “மக்கள் தங்கள் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு வங்கியில் வரிசையில் கால்கடுக்க நிற்கின்றனர். அதனால், எங்களால் முடிந்த உதவியை அவர்களுக்கு செய்யலாம் என்ற எண்ணத்தோடுதான் இந்த சுற்றிக்கை அனுப்பப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு பலரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில், பள்ளிகளில் கறுப்புப் பணம் புழக்கம் இருப்பது புதிது இல்லை என்று சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில், இப்படி அறிவிப்பு வெளியிட்டிருப்பது அவர்களிடமுள்ள கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றுவதற்கு இந்த யுக்தியை பயன்படுத்துகிறார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...