அரசு பள்ளிகளில் கணினிகள் ’அவுட்!!!

அரசுப் பள்ளிகளுக்கு அளித்த கம்ப்யூட்டர்களை பராமரிக்க, நிதி அளிக்காததால், பழுதடைந்த நிலையில், காட்சி பொருளாக வைக்கப்பட்டுள்ளதாக, புகார் எழுந்துள்ளது.

கோவை மாவட்டத்தில், 1,074 அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. பள்ளிகளில் கழிப்பறை, கூடுதல் வகுப்பறை கட்டுதல், பராமரிப்புக்கு
செலவினங்களுக்கு, ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், நிதி ஒதுக்கப்படுகிறது.

இதில், கணினி வழி கல்வி திட்டத்தில், கடந்த, 2006ம் கல்வியாண்டு முதல், அலுவலக, கற்பித்தல் பணிகளுக்காக, பள்ளிகளுக்கு கணினிகள் வழங்கப்படுகின்றன.

மாணவர்களின் எண்ணிக்கை, பள்ளிக்கான தேவையைப் பொறுத்து, அதிகபட்சம், மூன்று கம்ப்யூட்டர்கள் வரை, ஒரு பள்ளிக்கு அளிக்கப்படும்.இதில், இணையதள வசதி பொறுத்தி, கல்வி சார் செயல்பாடுகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம். இதுவரை, 148 தொடக்கப் பள்ளிகள், 308 நடுநிலைப் பள்ளிகளுக்கு, கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், இதை பராமரிக்க, நிதி ஒதுக்கவில்லை. பெற்றோர் ஆசிரியர் கழக நிதி, அடிப்படை செலவுகளுக்கே போதாததால், பழுதடைந்த கணினிகள் சரிபார்க்கப்படாமல், காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளன. இதனால், ’எமிஸ்’ இணையதளத்தில், மாணவர்களின் தகவல்கள் பதிவு செய்தல், கற்பித்தல் திட்டங்களை அறிவதில், சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கல்வித்துறை சார்பில், அவ்வப்போது கேட்கும் புள்ளி விபரங்கள் அனுப்ப, தனியார் பிரவுசிங் சென்டர்களை, நாடும் அவலம் நீடிப்பதாக, தலைமையாசிரியர்கள் புலம்புகின்றனர்.

இந்நிலையில் நடப்பாண்டில், 22 அரசு நடுநிலைப் பள்ளிகளுக்கு, 65 கணினிகள் வழங்க, 24 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கணினிகளும், சில ஆண்டுகளில், முறையான பராமரிப்பின்றி பழுதடைய வாய்ப்புண்டு. எனவே, கம்ப்யூட்டர் பராமரிப்புக்கென, நிதி ஒதுக்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்துள்ளது.

இதுகுறித்து, மதுக்கரை ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் கூறியதாவது:

பள்ளிகளுக்கு அளித்த கம்ப்யூட்டர்கள் இயக்குவது குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கவில்லை. பராமரிப்பு நிதி ஒதுக்காததால், ஒருமுறை பழுதடைந்தாலும் சரிசெய்ய, சில ஆயிரங்கள் வரை செலவாகிறது.

தேர்தல் பணிகளுக்காக, ஓட்டு சாவடியாக பயன்படுத்தும் பள்ளிகளில் உள்ள, கம்ப்யூட்டர்களை பயன்படுத்துகின்றனர். பின், பல தொழில்நுட்பக் கோளாறுகளுடன், திருப்பி அளிக்கின்றனர்.

அடிக்கடி பழுதுபார்க்க நிதியில்லாததால், தனியார் பிரவுசிங் சென்டர்களை தான், அலுவலக பணிகளுக்கு பயன்படுத்துகிறோம். எனவே, பள்ளி வாரியாக பழுதடைந்த நிலையில் உள்ள கம்ப்யூட்டர்களை கணக்கெடுத்து, சரிசெய்து தர, நிதி ஒதுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...