நாட்டிலேயே முதன்முதலாக வங்கி சேவையில் ஈடுபட ரோபோக்களை சிட்டி யூனியன் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. ஜப்பான் சாப்ட் வங்கியில் அறிமுகமான இந்த ரோபோ சேவை, தற்போது இந்தியாவில் முதன்முறையாக கும்பகோணத்தைச் சேர்ந்த சிட்டி யூனியன் வங்கியின் சென்னை, தி.நகர் கிளையில் அறிமுகப்படுத்தவுள்ளது. இதற்காக ஒரு ரோபோவை மட்டும் சோதனை அடிப்படையில் தற்போது
செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த ரோபோவுக்கு ‘லட்சுமி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.7 முதல் ரூ.8 லட்சமாகும். வங்கி ஊழியர்கள் மூன்று முதல் நான்கு பேரின் பணிகளை மேற்கொள்ளும் வகையிலும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 150 வாடிக்கையாளர்களுக்கு பணிபுரியும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வங்கி வாடிக்கையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் அளித்து வருகிறது. நிதி தொடர்பான கேள்விகளுக்கு மட்டும் ரோபோ பதில் அளிப்பதில்லை. அதனுடைய ஸ்கிரீனில் அதற்கான பதிலை காட்டுகிறது. ரோபோவிடம் கேட்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை எனில், ‘வங்கி மேலாளரை அணுகவும்’ என்று கூறுகிறதாம்.
தற்போது தி.நகர் கிளையில் வேலை செய்யும் ரோபோவின் சோதனை வெற்றி பெற்றால் தமிழகத்தில் உள்ள மேலும் 25 கிளைகளில் இந்த ரோபோ சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தனியார் வங்கியான ஹெச்.டி.எஃப்.சி வங்கியும் இதுபோன்ற ரோபோ சோதனை வடிவமைப்பில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.