காற்று மாசு எதிரொலி: டெல்லியில் பட்டாசு விற்பனைக்கு தடை சுப்ரீம் கோர்ட்டு அதிரடி.
டெல்லியிலும், தேசிய தலைநகர் பிராந்தியத்திலும் காற்று மிகவும் மாசுபட்டுள்ளது.
இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் 3 குழந்தைகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வழக்குகள் தொடுத்துள்ளனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி டி.எஸ். தாக்குர் தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன. அவற்றை விசாரித்த நீதிபதிகள், டெல்லியிலும், என்.சி.ஆர். என்னும் தேசிய தலைநகர் பிராந்தியத்திலும் (டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களான அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேச நகர பகுதிகளையும் உள்ளடக்கியது) பட்டாசு விற்பனைக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். இதுபற்றி நீதிபதிகள் குறிப்பிடுகையில், “காற்றின் தரம் மிகமிக மோசமானதை கருத்தில் கொண்டு, நாங்கள் இதில் தலையிட்டு பட்டாசு விற்பனை உரிமம் வழங்குவதை நிறுத்தி வைக்க முடியும்” என்றனர்.
அடுத்த உத்தரவு பிறப்பிக்கிறவரையில், பட்டாசு விற்பனைக்கு புதிதாக உரிமங்கள் வழங்கக்கூடாது, உரிமங்களை புதுப்பிக்கவும் கூடாது என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், பட்டாசு தயாரிக்க பயன்படுத்தக்கூடிய ரசாயன பொருட்களால் ஏற்படக்கூடிய தீய விளைவுகள் குறித்து 3 மாதங்களில் பதில் மனு தாக்கல் செய்ய மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர்.