கல்லூரி கேன்டீன்களுக்கு உணவு பாதுகாப்பு உரிமம் கட்டாயம்!!

அரசு மற்றும் தனியார் பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில், தனியார் மூலம் கேன்டீன்கள் நடத்தப்படுகின்றன.

பல்கலையின் சிண்டிகேட் மற்றும் மாணவர் குழுக்களின் கருத்துகளை கேட்டு, கேன்டீன் நடத்த தனியாருக்கு
அனுமதி தரப்படுகிறது. இதில், பல கேன்டீன்களில், மாணவர்களுக்கு தரமான உணவு அளிக்கப்படுவதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும், யு.ஜி.சி., சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில், நம் நாட்டில், ஒவ்வொரு நிறுவன வளாகத்திலும், உணவு பாதுகாப்பு விதிகளின்படியே கேன்டீன்கள் நடத்த வேண்டும்.

கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், உணவு பாதுகாப்பு சட்டப்படி உரிமம் பெறாமல், கேன்டீன் நடத்தக் கூடாது. கல்வி நிறுவனங்கள் விதிகளை மீறக்கூடாது என, கூறப்பட்டு உள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...