17 வருடங்களில் இல்லாத அளவுக்கு டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பு பள்ளிகளுக்கு விடுமுறை.
டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பால் 17 வருடங்களில் இல்லாத அளவுக்கு மோசமான பனிப்புகை மூட்டம் நிலவுகிறது. இதனால் 3 மாநகராட்சிகளை சேர்ந்த பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.காற்று மாசு அதிகரிப்பு
இந்திய தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிப்புகை மூட்டம் (பனிமூட்டமும், புகையும் கலந்த கலவை) நிலவுகிறது. குறிப்பாக காலை நேரத்தில் பனிப்புகை மிகமோசமாக உள்ளது. இதனால் டெல்லி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.இதுபற்றி கூறிய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம், டெல்லியில் 17 வருடங்களில் இல்லாத அளவுக்கு மிக மோசமான பனிப்புகை நிலவுகிறது. காற்று மாசு காரணமாக ஏற்பட்டுள்ள இந்த கடுமையான சூழ்நிலை குறித்து டெல்லி மாநில அரசு ஒரு சுகாதார எச்சரிக்கை வெளியிட வேண்டும். குழந்தைகள் வீடுகளிலேயே தங்கியிருக்க வேண்டும் எனவும் மக்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று கூறியிருந்தது.பள்ளிகளுக்கு விடுமுறை
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் காற்று மாசை கட்டுப்படுத்த சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாநில அரசுக்கு அறிவுறுத்தியது. பதர்பூர் அனல்மின்நிலையத்தில் இருந்து பறக்கும் சாம்பல் உள்பட காற்றில் ஏற்பட்டுள்ள மாசை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பழைய செங்கல் சூளைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.காற்று மாசு மற்றும் மோசமான பனிப்புகை காரணமாக தெற்கு டெல்லி, வடக்கு டெல்லி, கிழக்கு டெல்லி ஆகிய 3 மாநகராட்சிகளை சேர்ந்த அனைத்து பள்ளிகளுக்கும் இன்று (சனிக்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளிகளில் மொத்தம் 10 லட்சம் மாணவ–மாணவிகள் படிக்கிறார்கள்.பசுமை தீர்ப்பாயம் கண்டனம்
இப்போதைக்கு ஒரு நாள் மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டாலும், சூழ்நிலைக்கு ஏற்ப அதன்பின்னரும் பள்ளிகளை மூடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மாநகராட்சி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன.டெல்லி சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து தேசிய பசுமை தீர்ப்பாயத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நேற்று நடந்த விசாரணையில் தீர்ப்பாய அமர்வு, மத்திய, மாநில அரசுகள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தது