இன்று தேசிய திறனாய்வு தேர்வு!!

மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கான தேசிய திறனாய்வுத்  தேர்வு இன்று நடக்கிறது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் 10ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு (பிஎச்டி) வரை தடையின்றி கல்வியை தொடர வசதியாக மத்திய அரசின் சார்பில் கல்வி உதவித் தொகை

வழங்கப்படுகிறது. இதற்காக தேசிய திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.

இன்று மாநில அளவிலான தேர்வு நடக்கிறது. தமிழகத்தில் 1 லட்சத்து 55 ஆயிரம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக 449 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. முதல்கட்ட தேர்வு இன்று காலை 9.30 மணிக்கு தொடங்கி 11 மணி வரை நடக்கும். இரண்டாம் கட்ட தேர்வு 11.30 மணிக்கு தொடங்கி மதியம் 1 மணி வரை நடக்கிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...