சென்னை போக்குவரத்து நெரிசல் குறித்து மாநகராட்சி அதிகாரிகளும் காவல் துறையினரும் உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யும்படி உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:
’சென்னை பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில் விதிகளை மீறி அரசு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. ஏற்கனவே, சென்னையில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ள நிலையில் வாகனங்களை சாலையிலே நிறுத்தி வைப்பதனால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து பொதுமக்களுக்கு அதிக சிரமத்தை உருவாக்குகிறது. இதுகுறித்து, காவல் துறையில் பலமுறை புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை’ என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு மீதான வழக்கு விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி கவுல், மற்றும் நீதிபதி மகாதேவன் அடங்கிய அமர்வு
முன் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள், சென்னை போக்குவரத்து நெரிசல் குறித்து மாநகராட்சி அதிகாரிகளும், காவல் துறையினரும் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கை வரும் நவம்பர்-14 தேதிக்கு ஒத்தி வைத்தனர்.
இதுபோன்று கடந்த மாதம் சென்னை பாரிமுனை, பூக்கடை, என்எஸ்சி போஸ் சாலை உள்ளிட்ட பகுதியில் ஆக்கிரமிப்பு நடைபெறாமல் தடுக்க வேண்டிய அதிகாரிகள் தகுதியற்றவர்களாக இருக்கின்றனர் எனக் கூறி, அவர்களை உடனடியாக பணியிடமாற்றம் செய்தும் அவர்களுக்குப் பதிலாக புதிய அதிகாரிகளை உடனடியாக நியமிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.