நாடு முழுவதும் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. மேலும், இன்று முதல் புதிய 500ரூபாய் மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வங்கிகளில் வழங்கப்படும் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று காலை முதல் மக்கள் வங்கியில் குவிந்தவண்ணம்
உள்ளனர். இந்நிலையில், உத்திரபிரதேச மாநிலத்தில் 1000 ரூபாயை மாற்ற முடியாத அதிர்ச்சியில் பெண் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூரை சேர்ந்தவர் தித்ரஜி (40). திர்தராஜி சலவை தொழில் செய்து வருகிறார். நேற்று 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற வங்கிக்குச் சென்றபோது, வங்கி அதிகாரிகள் ,பணத்தை இரண்டு நாட்களுக்கு மாற்ற முடியாது என அவரிடம் கூறியுள்ளனர். அதைத்தொடர்ந்து, திர்தராஜி வங்கியில் இருந்து அதிர்ச்சியுடன் வெளியேறியபோது, வங்கி வாசலிலேயே மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் அங்கேயே உயிரிழந்தார். அவர் அருகில் அவர் கொண்டு வந்த 1000 ரூபாய் நோட்டுகள், வங்கி பாஸ்புக் சிதறிக் கிடந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் சிலர் திர்தராஜி உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அங்கு வந்த உறவினர்கள், aவரது உடலைப் பார்த்து கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதைத் தொடர்ந்து, குஷிநகர் மாவட்ட மேஜிஸ்திரேட், இறந்த திர்தராஜியின் வீட்டிற்கு சென்று விசாரிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த மரணம் அதிர்ச்சியின் மூலமாக தான் நடந்தது என உறுதிசெய்யப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
பணம் மாற்றக் குழப்பத்தால் எட்டு வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
உத்திரபிரதேசம் மஹுவா மஃபி கிராமத்தில், 8 வயது சிறுமிக்கு மருத்துவ சிகிச்சைக்கு அவர் தந்தை அழைத்து செல்லும் போது, வண்டியில் பெட்ரோல் தீர்ந்துள்ளது. உடனே, பெட்ரோல் பங்குக்குச் சென்று, 1,000 ரூபாய் நோட்டைக் கொடுத்து பெட்ரோல் நிரப்பச் சென்றபோது , பெட்ரோல் பங்கில் 1000 ரூபாய் நோட்டை வாங்க மறுத்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால், சரியான நேரத்தில் சிறுமிக்கு சிகிச்சை அளிக்க முடியாத காரணத்தால் அவர் அங்கேயே உயிரிழந்தார்.
ஆந்திரா மெகபூபாபாத் மாவட்டம் சனிகாபூரை சேர்ந்தவர் விநோதா என்னும் பெண். அவர் 12 ஏக்கர் நிலத்தை விற்று 55 லட்சம் ரூபாய் வைத்திருந்தார். இந்நிலையில், பிரதமர் மோடி 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தார். இதைப் தொலைகாட்சியில் பார்த்த அவரது மகன் பணம் செல்லாமல் போய்விட்டது என தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சிடைந்த விநோதா தூக்குப் போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்திய நாட்டில், கிராமப்புறங்களிலும் அதிக படிப்பறிவு இல்லாத மக்களிடமும் இந்த ரூபாய் நோட்டு மாற்றச் செய்தி முழுமையாக சென்று சேரவில்லை. இந்த மாற்றம் குறித்த செய்தி சென்று சேர்ந்திருக்கும் இடங்களிலும் அதை மக்கள் முழுமையாக உள்வாங்கவில்லை. இதனால் பதற்றமும் குழப்பமும் அச்சமும் நீடிக்கிறது. அது விலைமதிப்பில்லாத உயிரிழப்புக்கும் காரணமாகி விடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.