சென்னை பல்கலையில், மூன்று மாதங்களாக சிண்டிகேட் கூட்டம் நடத்தப்படாததால், நிர்வாக பணிகள் முடங்கி உள்ளன.
தமிழகத்திலுள்ள அரசு பல்கலைகளில், அனைத்து நிர்வாக பணிகளுக்கும் சிண்டிகேட் மற்றும் செனட்டில் முக்கிய
முடிவுகள் எடுக்கப்படும். மாதந்தோறும் சிண்டிகேட் கூட்டம் நடத்தப்பட்டு, அதில் பல்கலையின் செயல்பாடுகளுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும். ஒப்புதல் கிடைக்காவிட்டால், பணிகளை தொடர நிதி ஒதுக்க முடியாது.
சென்னை பல்கலை பணிகளுக்கு, மாதந்தோறும் சிண்டிகேட் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்படும். மூன்று மாதங்களாக, சிண்டிகேட் கூட்டம் நடத்தப்படவில்லை. துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ள நிலையில், ஒருங்கிணைப்பு குழு தலைவராக இருக்கும் உயர்க்கல்வி செயலரிடம், சிண்டிகேட் கூட்டத்தை கூட்டும்படி, பேராசிரியர்கள் மனு அளித்துள்ளனர்; ஆனாலும், பல்கலை நிர்வாகம் தாமதம் செய்து வருகிறது.
இதுகுறித்து, சிண்டிகேட் உறுப்பினர்கள் சிலர் கூறுகையில், ’சிண்டிகேட் கூட்டத்தை நடத்தாமல் விடுவது, சென்னை பல்கலையில் இதுவரை இல்லாத வரலாறு. எனவே, பதிவாளரும், ஒருங்கிணைப்பு குழுவினரும் ஆலோசித்து, உடனடியாக கூட்டத்தை கூட்ட வேண்டும்’ என்றனர்.