சமூக வலைதளங்களில், ரேஷன் கார்டு தொடர்பாக, இளைஞர்கள் சரமாரியாக கேள்விகள் கேட்க துவங்கிஉள்ளனர்.
ரேஷன் கார்டு, ரேஷன் பொருட்கள் தொடர்பான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை, 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற சமூக வலைதளங்களில் தெரிவிக்கும் வசதியை, உணவு
வழங்கல் துறை துவக்கியுள்ளது. இதையடுத்து, அவற்றின் மூலமாக, உணவுத் துறை
அதிகாரிகளிடம், இளைஞர்கள் கேள்விகள் கேட்ட வண்ணம் உள்ளனர்.
அதன் விபரம்:
● புதிய ரேஷன் கார்டுக்கு, 2013ல் விண்ணப்பித்தேன்; இதுவரை, வழங்கவில்லை; என்ன செய்ய வேண்டும்?
● ரேஷன் கடைகளில், காலி பணியிடங்களை நிரப்புவது எப்போது?
● இணையதளத்தில், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் திட்டம், எப்போது செயல்பாட்டுக்கு வரும்?
இது குறித்து, உணவுத் துறைஅதிகாரி ஒருவர் கூறியதாவது:சமூக வலைதளங்களில் புகார் கூறுபவருக்கு, உணவு வழங்கல் சேவை மைய தொலைபேசி
எண் வழங்கப்படுகிறது. அந்த எண்ணில் புகாரை கூறினால், அதை பதிவு செய்து, சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு தெரிவிக்கப்படுகிறது. புகார்தாரருக்கு, பதிவு எண் வழங்கப்படும். அதன்மூலம், அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை விபரத்தை, அவர் அறியலாம். இவ்வாறு அவர் கூறினார்.