ஃபேஸ்புக் நிறுவனருக்கே இந்த நிலை!!!

முகநூல் என தமிழில் அழைக்கப்படும் ஃபேஸ்புக் சமூகதளம் இல்லாமல் இன்று இளைஞர்கள் இயங்க முடியாது என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். இதன் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் இந்த வெற்றியால் உலகம் முழுவதும் கவனிக்கப்படும் நபராக மாறிப்போனார். ‘நீங்க என்

ஃபேஸ்புக் பிரெண்டா?’ என்று கேட்கும் அளவுக்கு மக்களிடம் செல்வாக்கை செலுத்தியுள்ளது ஃபேஸ்புக். இந்நிலையில் இந்நிறுவனத்தின் நிறுவனரான மார்க் ஜூக்கர்பெர்க் இறந்துவிட்டதாக அவரின் முகநூல் பக்கத்தில் இரங்கல் செய்தி வெளியிடப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஃபேஸ்புக் நிறுவனருக்கே இந்த நிலையா? என்று மக்கள் கவலைப்பட ஆரம்பித்தபோது அது பொய்யான செய்தி என்று தெரிய வந்துள்ளது.

ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்கள் இறந்துவிட்டால், அவர்களின் முகநூல் பக்கத்தில் ஃபேஸ்புக் சார்பாக இரங்கல் செய்தி பதிவிடப்படும். இதனைத் தொடர்ந்து அவரின் ஃபேஸ்புக் கணக்கை பார்வையிடுபவர்கள் அவர் இறந்துவிட்டதை அறிந்து கொள்வார்கள். இந்நிலையில் ஃபேஸ்புக்கில் கணக்கு வைத்திருக்கும் சுமார் 1.2 மில்லியன் பேரின் ஃபேஸ்புக் பக்கத்தில் அவர்கள் இறந்துவிட்டதாக ஃபேஸ்புக் பதிவிட்டிருந்தது. தங்களுடைய முகநூல் பக்கத்தில் தாங்கள் இறந்துவிட்டதாக கூறப்படும் பதிவைக் கண்டு பதற்றமடைந்தவர்கள் ட்விட்டரில் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து சுதாரித்த ஃபேஸ்புக் நிறுவனம், தங்களின் தவறுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டது. தங்களுடைய வரலாற்றில் இதுவரை இப்படி ஒரு தவறு நடைபெற்றது இல்லை எனவும் இந்த தொழில்நுட்பக் கோளாறை விரைவில் சரிசெய்து விடுவதாகவும் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...