ஆசியாவின் பணக்காரக் குடும்பங்களின் பட்டியல்!

ஆசியாவின் 50 பணக்கார குடும்பங்களின் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த அம்பனி குடும்பம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.



2016ஆம் ஆண்டுக்கான ஆசியாவின் பணக்கார குடும்பங்களின் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில், வடகொரியாவைச் சேர்ந்த மின்னணு உற்பத்தியாளரான சாம்சங் நிறுவனத்தின் நிறுவனரான லீ-யின் குடும்பம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இவரது சொத்து மதிப்பு 29.6 பில்லியன் டாலராகும்.

அடுத்ததாக, இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் தாய்லாந்தைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான Charoen Pokphand (CP) குரூப் நிறுவனத்தின் நிறுவனர் Chearavanont குடும்பம் உள்ளது. இவர்களது மொத்த சொத்து மதிப்பு 27.7 பில்லியன் டாலராகும்.

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரும் ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவருமான அம்பானியின் குடும்பம் இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அம்பானி குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 25.8 பில்லியன் டாலராகும்.

போர்ப்ஸ் வெளியிட்டுள்ள இந்தப் பட்டியலில் முதல் ஐம்பது இடத்தில் பிரேம்ஜி குடும்பம், மிஸ்ட்ரி குடும்பம், டாடா குடும்பம், பிர்லா குடும்பம் உள்பட இந்தியாவைச் சேர்ந்த 17 குடும்பங்கள் இடம்பெற்றுள்ளன. போர்ப்ஸ் வெளியிட்டுள்ள முதல் ஐம்பது இடங்களில் இடம்பெற்ற குடும்பங்களுக்கான பட்டியல்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...