தலைமை செயலகத்தில் முக்கிய கோப்புகள் தேக்கம் : வெளியூர் செல்லும் அரசு அதிகாரிகாரிகள்!!

முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் உள்ளதாலும், அமைச்சர்கள் தேர்தல் பணிக்கு சென்று விட்டதாலும்,தலைமை செயலகத்தில், கோப்புகள் தேக்கம் அடைந்துள்ளன.

முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவு காரணமாக, செப்., 22 முதல், அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


அதேநேரத்தில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு, 19ல் தேர்தல் நடைபெற உள்ளதால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும், மூன்று தொகுதிகளிலும் முகாமிட்டுள்ளனர்.


அரசு ஆலோசகர், தலைமைச் செயலர் என, அனைவரும், தினமும் அப்பல்லோ மருத்துவ

மனை சென்று வருகின்றனர். முதல்வர், அமைச்சர் கள் யாரும், தலைமைச் செயலகம் வராததால், துறை உயர் அதிகாரிகளில் பெரும்பாலானோர் பணிக்கு வருவதில்லை. 'கேம்ப்' எனக் கூறி, வெளியூர் செல்கின்றனர்.

இதனால், தலைமைச் செயலகம் வெறிச்சோடி கிடக்கிறது. அரசு பணிகள் ஸ்தம்பித்து உள்ளன; கோப்புகள் எதுவும் நகர வில்லை. அடுத்த ஆண்டிற் கான, பொது விடுமுறை குறித்த அறிவிப்பு, காலண்டர் அச்சடிப்போர் வசதிக் காக, அக்டோபர் மாதம் இறுதியில் வெளியிடப்படும்.


பக்கத்து மாநிலங்களான, ஆந்திரா, தெலுங்கானா போன்றவற்றில், பொது விடுமுறை அறிவிப்பு வெளி யாகி, காலண்டர் அச்சிடும் பணி துவக்கப்பட்டுள் ளது; ஆனால், தமிழகத்தில் இன்னமும் வெளியிடப் படவில்லை.


இதனால், காலண்டர் தயாரிப்போர், பணியை துவக்க முடியாமல், தவித்து வருகின்றனர். பொது விடு முறை அறிவிப்பு குறித்தகோப்பு,இரண்டு வாரத்திற் கும் மேலாக, தலைமை செயலர் அறையில் உள்ளது. தலைமை செயலர் ஒப்புதலுக்காக காத்தி ருக்கி றோம் என, பொதுத்துறை ஊழியர்கள் கூறுகின்றனர்.

அகவிலைப்படியை, 125 சதவீதத்தில் இருந்து,

132 ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பான கோப்பும் கையெழுத்திற்காக, காத்திருப்பதாக கூறப்படுகிறது.

காவிரியில் வினாடிக்கு, 2,000 கன அடி தண்ணீர் திறந்து விடும்படி, கர்நாடக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை, கர்நாடக அரசு செயல்படுத்தவில்லை. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், தமிழக அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்; ஆனால், அரசு முடிவெடுக்கா மல் உள்ளது. இது போல, உடனடியாக கவனிக்க வேண்டிய கோப்புகள், தேங்கி நிற்பதாக புகார் எழுந்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...