கடன் தள்ளுபடி இல்லை: அருந்ததி பட்டாச்சார்யா!!

நாடு முழுவதும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா. அப்போது செய்தியாளர்கள் அவரிடம் பல முக்கிய கேள்விகளை முன்வைத்தனர்.

முக்கியமாக ‘63 தொழிலதிபர்களின் கடன் தள்ளுபடி செய்யப்பட்டதா?’ என்ற கேள்வி எழுப்பினர். இதை கடுமையாக மறுத்தார் அருந்ததி பட்டாச்சார்யா.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, விஜய் மல்லையாவின் ரூபாய் 9,000 கோடி கடனை ஸ்டேட் வங்கி தள்ளுபடி செய்துவிட்டது என்ற செய்தி பரவியது. மேலும், விஜய் மல்லையா, லலித்மோடி போன்ற 63 தொழிலதிபர்களிடம் இழந்த கடனை ஈடுகட்டவே மத்திய அரசு ரூபாய் நோட்டு செல்லாது என்று அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. மேலும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர், ‘கடனோடு தப்பியோடிய விஜய் மல்லையா எங்கே?’ என்ற கேள்வியையும் எழுப்பி வந்தனர். இந்நிலையில்தான் ஸ்டேட் வங்கியின் தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா இதற்கு பதிலளித்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. 63 தொழில் அதிபரின் கடன் தள்ளுபடி என்பது தவறான தகவல். அவர்களின் வங்கிக்கணக்குகளைத் தீவிரமாக கண்காணித்து வருகிறோம். கடன் பாக்கி அனைத்தையும் திரும்பப் பெற பாரத ஸ்டேட் வங்கி கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதுவரை வழங்கப்பட்டிருக்கும் கடனுக்கான வட்டி குறைப்பு குறித்து இப்போது நான் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது” என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “கடந்த 15 நாட்களில் பாரத ஸ்டேட் வங்கியில் ரூபாய் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டிருக்கும் தொகையில் இது மூன்றில் ஒரு பங்கு. டெபாசிட் செய்துள்ள பணத்தில் 10 முதல் 15 சதவிகிதம் மக்கள் எடுத்திருக்கலாம். ஆனால், வங்கிகளின் முதலீட்டை அதிகரிக்க மத்திய அரசு ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்ததாக குற்றம் சாட்டுவதை ஏற்க முடியாது. கறுப்புப் பணத்தையும் கள்ளப் பணத்தையும் ஒழிக்கவே மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக நான் கருதுகிறேன். இதை நான் வரவேற்கிறேன். இன்று முதல் சென்னையில் ரூபாய் 500 புழக்கத்துக்கு விடப்படும். அவற்றை ஏடிஎம்களிலும் எடுத்துக்கொள்ளலாம். இதனால் தற்போது நிலவும் பணத்தட்டுப்பாடு விரைவில் சீரான நிலையை அடையும்” என்று கூறினார் அவர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...