அண்ணா யூனிவர்சிட்டி ரிசல்ட் – சாய்ராம் கல்லூரி முதலிடம்!!

தமிழகத்தில் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா டிசம்பர் மாதம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், பொறியியல் கல்லூரி மாணவர்களின் ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. இதில், அதிக எண்ணிக்கையிலான 236 ரேங்குகள் பெற்று, சென்னை சாய்ராம் பொறியியல் கல்லூரி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

பிஇ, பிடெக், எம்இ, எம்டெக், எம்சிஏ படிப்புகளில் பல்கலைக்கழக அளவில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் ரேங்க் பட்டியலை பாடப்பிரிவுகள் வாரியாக அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annauniv.edu) பார்த்து தெரிந்துக் கொள்ளலாம். இந்த பட்டியலில், வெவ்வேறு படிப்புகள் மற்றும் பாடப்பிரிவுகள் வாரியாக பல்கலைக்கழக அளவில் முதலிடம், இரண்டாம் இடம், மூன்றாம் இடம் என்னும் வரிசையில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களின் பெயர், படித்த கல்லூரியின் பெயர் போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளது.

இதுகுறித்து, முதலிடம் பிடித்துள்ள சாய்ராம் கல்வி குழுமங்களின் முதன்மைச் செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ கூறுகையில், “பி.இ. இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் கண்ட்ரோல், மெக்கானிக்கல், புரடக்ஷன் என்ஜினீயரிங் மற்றும் எம்.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகியவற்றில் எங்கள் கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளனர். ஒட்டுமொத்த ரேங்க் எண்ணிக்கையில் பி.இ. படிப்பில் 172 ரேங்குகள், எம்.இ. படிப்பில் 64 ரேங்குகள் என மொத்தம் 236 ரேங்குகள் பெற்று மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளோம். கடந்த 2014ஆம் ஆண்டு 154 ரேங்குகள் பெற்றும், 2015ஆம் ஆண்டு 170 ரேங்குகள் பெற்றும், இப்போது 236 ரேங்குகள் பெற்றும் தொடர்ந்து மூன்றாண்டுகளாக மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளோம். இது மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. இதற்காக பேராசிரியர்களும் சாதனை படைத்த மாணவர்களும் கடுமையாக உழைத்துள்ளனர். அவர்களுக்கு என் பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.

137 ரேங்குகள் பெற்று சென்னை ஆர்.எம்.கே. பொறியியல் கல்லூரி இரண்டாம் இடத்தையும், 136 ரேங்குகள் எடுத்து எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...