ஐ.நா.,வின் சட்ட நிபுணர் குழுவில் இளம் இந்தியர்!!

ஐ.நா.,வின் சட்ட குழுவில் ஆசிய பசிபிக் பிராந்தியத்திற்கான உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் இந்தியர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
முதல் இந்தியர்:

சர்வதேச சட்ட குழுவுக்கான தேர்தலில், வெற்றி பெற்ற 34 பேரில் அனிருத்தா ராஜ்புத்(33) என்ற இந்தியரும் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். வரும் ஜனவரி 2017 ல் துவங்கும் இவரது பதவிக்காலம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த உறுப்பினர் பதவிக்காக நேற்று நடந்த தேர்தலில்
ராஜ்புத்திற்கு ஆதரவாக 160 ஓட்டுக்கள் கிடைத்தன. இந்த பதவிக்கு தேர்வாகும் முதல் இந்தியர் என்ற பெருமையை ராஜ்புத்திற்கு கிடைத்துள்ளதாக ஐ.நா.,விற்கான இந்திய தூதர் சையத் அக்பரூதீன் கூறியுள்ளார்.


பயிற்சி வழக்கறிஞர்:

தற்போது சுப்ரீம் கோர்ட்டில் பயிற்சி வழக்கறிஞராக உள்ளார். வெளியுறவு அமைச்சகத்திற்கு நெருக்கமாக உள்ள வழக்கறிஞர்களை தவிர்த்து மற்ற வழக்கறிஞர் ஒருவர் சர்வதேச அமைப்பில் இடம்பெறுவது இதுவே முதல்முறை. லண்டனில் உள்ள பொருளாதாரம் மற்றும் அரசியல் அறிவியல் கல்லூரியின் முன்னாள் மாணவரான இவர், கடந்த 2015ம் ஆண்டு வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் மத்திய சட்ட குழு அமைத்த குழுவில் இடம்பெற்றவர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...