சென்னை அண்ணா நூலகம் பராமரிப்புக்கு இறுதி கெடு!!

சென்னை அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தை பராமரிக்க, டிச.,14க்குள் குழு அமைக்க வேண்டும். இல்லாவிடில், நீதிமன்றமே குழுவை அமைத்து உத்தரவிடும்' என, சென்னை உயர்நீதிமன்றம் இறுதி கெடு விதித்துள்ளது.



சென்னை, கோட்டூர்புரத்தில், 178 கோடி ரூபாய் செலவில், அண்ணா நுாற்றாண்டு நுாலகம், 2010ல் துவங்கப்பட்டது. ஆசியாவிலேயே மிகப் பெரிய நுாலகமான, இங்கு, எட்டு மாடிகளில், பல பிரிவில் நுால்கள் வைக்கப்பட்டு, படிக்க, பொதுமக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நுாலகத்தை முறையாக பராமரிக்க உத்தரவிட கோரி, பேராசிரியை மனோன்மணி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நுாலகம் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதற்கான புகைப்பட ஆதாரங்களையும் தாக்கல் செய்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு
சென்னை நுாற்றாண்டு அண்ணா நுாலகத்தை பராமரிக்க குழு அமைக்க வேண்டும் என்று ஜூன் மாதமே உத்தரவிடப்பட்டது.

ஆனால், இதுவரை தமிழக அரசு குழுவை அமைக்கவில்லை. எனவே, குழுவை அமைத்து டிச.,14க்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிடில் நீதிமன்றமே குழுவை அமைத்து உத்தரவிடும் என இறுதி எச்சரிக்கையாக உத்தரவிடப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...