ரூ.500 மற்றும் 1,000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து டில்லி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ரியல் எஸ்டேட் துறை ஆட்டம் கண்டுள்ளது. ஆனால், இது தற்காலிகமானது தான் எனவும், ரியல் எஸ்டேட் துறை மீண்டு எழும் என பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.கறுப்பு பணத்தை கொண்டு வரவும், கள்ள நோட்டுக்களை ஒழிக்கவும் ரூ.500 மற்றும் 1,000
நோட்டுக்கள் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மக்கள் தங்களிடம் உள்ள நோட்டுக்களை வங்கியில் செலுத்தலாம் என அறிவித்துள்ளார். டில்லியில் உள்ள பண்ணை வீடுகள், குடியிருப்புகள், அடுக்குமாடி கட்டடங்கள் மற்றும் கூர்கான், பரிதாபாத், நொய்டா மற்றும் காசியாபாத்தில் உள்ள மறுவிற்பனை வீடுகள் ஆகியவை அங்கீகாரம் பெறாத அமைப்புகள் நிர்வகிக்கின்றன.
இவர்கள் மூலம் சந்தேகப்படும்படியான பணபரிவர்த்தனை நடப்பதாக கருதப்படுகிறது. இதனை ரியல் எஸ்டே மசோதா மூலம் நேர்வழிப்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. ரியல் எஸ்டேட் மசோதாவை தொடர்ந்து ரூபாய் நோட்டு வாபஸ் என்ற மத்திய அரசின் நடவடிக்கை காரணமாக ரியாலிட்டி சந்தைகள் 17.5 சதவீத சரிவை சந்தித்தன. டில்லி மற்றும் கூர்கானில் ரியல் எஸ்டேட் துறையில் 40 சதவீத இழப்பு ஏற்பட்டுள்ளது.
டில்லியின் தெற்கு பகுதியில் உள்ள சதார்ப்பூர் பகுதியில் பண்ணை வீட்டின் விலை ஒரே நாள் இரவில் ரூ.5 கோடி குறைந்துள்ளது. கூர்கானில் வீட்டின் விலை ரூ.50 லட்சம் சரிந்துள்ளது. இது தொடர்பாக ரியல் எஸ்டே வல்லுநர்கள் கூறுகையில், இந்த விலை சரிவு தற்காலிகமானது தான். விரைவில் இந்த துறை சரிவிலிருந்து மீண்டுவிடும்.
அரசின் இந்த நடவடிக்கை கட்டமைப்பு ரீதியாக நல்ல விளைவுகளை தரும் என்றனர். மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறுகையில், அரசின் இந்த முடிவு வீடு வாங்குபவர்களுக்கு நல்லதையே தரும். விரை சரிவால், பெரும்பாலான மக்கள் வீடு வாங்கும் நிலையை ஏற்படுத்தும் என்றார். மத்திய அமைச்சர் கட்காரி கூறுகையில், ரியல் எஸ்டேட் துறையில் கறுப்பு பணம் புழங்குவதை மத்திய அரசின் நடவடிக்கை கட்டுப்படுத்தும்.
முறையாக வரி கட்டுபவர்கள் பயப்பட தேவையில்லை என்றார். ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்றின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், பணப்பரிமாற்றம் காரணமாக நிறைய யூகங்கள் இந்த துறையில் இருந்தன. தற்போது கட்டடங்களின் உண்மையான விலை தெரியவரும். இதன் மூலம் வீடு வாங்குபவர்கள் நல்ல பலனை பெறுவார்கள்.
அதிக பணம் புழங்கும் இந்த துறையில், சிறிய கட்டடம் கட்டுபவர்கள், சொத்து தரகர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்றார். அரசின் நடவடிக்கை காரணமாக, நேற்று ரியல் எஸ்டேட் துறையில், விலை அரசு நிர்ணயித்த தொகைக்கு விற்பனையானது. ரூ. 1 லட்சத்திற்கு விற்பனையான 9 சதுர அடி, அரசின் நடவடிக்கை காரணமாக ரூ.65 ஆயிரத்திற்கு விற்பனையானதாக கூர்கானை சேர்ந்த டீலர் ஒருவர் கூறினார்.