டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டம் ரத்து !

டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் ரத்து செய்யப்படுவதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார்.டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதற்கு தமிழகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. விவசாய சங்கங்கள்

மற்றும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. திட்டத்தை கைவிட வேண்டும் என மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டது.இந்நிலையில் மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அளித்த பேட்டி: டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டம் ரத்து செய்யப்படுகிறது. ஒரே இடத்தை 2நிறுவனங்களுக்கு தந்ததாலும், உள்ளூர் மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாலும் இந்த திட்டம் ரத்து செய்யப்படுகிறது.


கரும்பிலிருந்து எத்தனால் தயாரிக்க தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.ஷேல் எரிவாயு எடுக்கும் திட்டம் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படாது. கெயில் எரிவாயு பதிக்கும் திட்டத்தை செயல்படுத்தும் திட்டத்தில் மத்திய அரசின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம். ஒத்துழைப்பு தராமல் இருந்த இந்த திட்டத்திற்கு கேரள அரசு அனுமதி தற்போது ஒத்துழைப்பு வழங்குகிறது என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...