சென்னை, மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் ஊனச்சான்றிதழ் வழங்க வாரம் இருமுறை மருத்துவ ஆய்வுக்குழு கண்டிப்பாக கூட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு
உத்தரவிட்டுள்ளது.நீதிபதி கடிதம்மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் வழங்கும் இழப்பீட்டுத் தொகை பாதிக்கப்பட்டவர்களுக்கு நேரடியாக சென்றடையும் வகையில், அவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க வேண்டும். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் ஊனச்சான்றுகளை மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அரசு பதிவுபெற்ற மத்திய, மாநில மருத்துவ ஆய்வுக்குழுவினர் மட்டுமே வழங்க வேண்டும் என்று ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.ஆனால், இந்த உத்தரவுப்படி மோட்டார் வாகன விபத்து வழக்குகளில் உடல் ஊனச்சான்று பெறுவதற்கு மாவட்டம் தோறும் மருத்துவ ஆய்வுக்குழு இல்லை என்றும், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது என்றும் ‘லா அசோசியேஷன்’ என்ற வக்கீல் சங்கமும், விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதியும் தனித்தனியாக ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் கடிதம் அனுப்பினார்கள்.எத்தனை சான்றிதழ்கள்?இந்த கடிதங்களை பரிசீலித்து தகுந்த உத்தரவினை பிறப்பிக்க வேண்டும் என்று நீதிபதி ராஜீவ் எஸ்.ஷக்தேர், நீதிபதி எஸ்.வைத்தியநாதன் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சுக்கு, தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் உத்தரவிட்டார்.இந்த உத்தரவின்படி, இந்த கடிதங்களின் அடிப்படையில் டிவிசன் பெஞ்ச் நீதிபதிகள் மீண்டும் விசாரணை நடத்தினர்.அப்போது மாநில மற்றும் மாவட்ட மருத்துவ ஆய்வுக்குழு இதுவரை எத்தனை வழக்குகளில் உடல் ஊனச்சான்று வழங்கியுள்ளது? என்பது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க அட்வகேட் ஜெனரலுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.நிவாரணம் எப்போது?இதற்கு பதில்அளித்த அட்வகேட் ஜெனரல், ‘தமிழகத்தில் 22 மருத்துவ கல்லூரிகள் மற்றும் மாவட்ட மருத்துவ ஆய்வுக் குழுக்களுக்கு மோட்டார் வாகன வழக்குகளுக்கான தீர்ப்பாயத்தில் இருந்து பரிந்துரைக்கப்பட்ட 945 வழக்குகளை ஆய்வு செய்தன. இதன்படி, 47 வழக்குகளில் மட்டுமே உடல் ஊனச்சான்றுகளை, மருத்துவ ஆய்வுக்குழுக்கள் வழங்கியுள்ளன’ என்று பதிலளித்தார்.இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், ‘இந்த வேகத்தில் மருத்துவ ஆய்வுக்குழு, உடல் ஊனச்சான்றிதழ்களை வழங்கினால் வழக்கு எப்போது முடிவுக்கு வரும்? பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போது நிவாரணம் கிடைக்கும்?’ என்று கேள்வி எழுப்பினார்கள்.வாரம் இருமுறைபின்னர், ‘மாநில மற்றும் மாவட்ட மருத்துவ ஆய்வுக்குழுக்கள் வாரம் இருமுறை கண்டிப்பாக கூட வேண்டும். மோட்டார் வாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயங்கள் அனுப்பிவைத்த வழக்குகளை பரிசீலித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு உடல் ஊனச்சான்றுகளை 4 வாரத்துக்குள் வழங்கவேண்டும்’ என்று நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்