சென்னைமத்திய, மாநில அரசு ஊழியர்கள் மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு நவம்பர், டிசம்பர் மாத சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என பிருந்தா காரத் கூறினார்.கண்டன ஆர்ப்பாட்டம்500 ரூபாய், 1,000 ரூபாய் செல்லாது என மத்திய அரசு அறிவிக்கப்பட்டதன் காரணமாக மத்திய, மாநில மற்றும்
பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க கோரி மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன தலைவர் ஜெ.ராமமூர்த்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் இரா.தமிழ் செல்வி ஆகியோர் தலைமை தாங்கினர். மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளன பொதுச் செயலாளர் எம்.துரைப்பாண்டியன் விளக்கவுரை ஆற்றினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் சிறப்புரையாற்றினார்.தவறான முடிவுஆர்ப்பாட்டத்தின் போது பிருந்தா காரத் கூறியதாவது:-500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது ஒரு தவறான முடிவாகும். இது கருப்பு பணத்துக்கு எதிரான போர் அல்ல, சாதாரண மக்கள் மீதான போராகும். 86 சதவீதம் புழக்கத்தில் உள்ள 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து இருப்பதன் மூலம் ஏழை, எளிய மக்கள் பாதிப்படைந்து உள்ளனர்.கருப்பு பணம் வைத்து இருப்பவர்கள் எல்லோரும் தங்கள் பணத்தை சுவிஸ் வங்கியில் வைத்து விட்டு, சிரித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஏழை, எளிய தினக்கூலிகள், அமைப்பு சாரா தொழிலாளிகளுக்கு கையில் கூலியை பெற்றுக் கொண்டு மாற்ற முடியாமல் கஷ்டப்படுகிறார்கள்.டிசம்பர் 31-ந்தேதி வரை...500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதை மத்திய அரசு நிறுத்தி இருப்பதற்கு காரணம், அவர்களிடம் போதுமான அளவு பணம் கையிருப்பு இல்லை. ஆனால், இதையும் அவர்கள் நல்லதாகவே பேசி வருகின்றனர். அதாவது, பணம் மாற்ற வரும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்று கூறுகின்றனர். கருப்பு பணத்தை திரும்ப கொண்டு வருவதில் இந்த திட்டம் முழுவதும் தோல்வி அடைந்துள்ளது.எங்களது முக்கியமான கோரிக்கை என்னவென்றால், தொழிலாளர்களுக்கு கூலி வழங்குவதற்கும், அன்றாட தேவைகளை மக்கள் பூர்த்தி செய்வதற்கும் வருகிற டிசம்பர் 31-ந் தேதி வரை பழைய 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை அனுமதிக்க வேண்டும். மேலும், மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்களின் நவம்பர், டிசம்பர் மாத சம்பளங்களை ரொக்க பணமாக கையில் வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்