பேஸ்புக், வாட்ஸ் ஆப்பில் புகார் தெரிவிக்க ஆர்வம் !!

நகர் போலீசாருக்கு தினமும் குவியும் தகவல்
மதுரை நகர் போலீஸ் பேஸ்புக், வாட்ஸ் ஆப்பில் மக்கள் ஆர்வமுடன் புகார் தெரிவிப்பதோடு, சில தீர்வுகளையும் சொல்லி வருகின்றனர்.இரண்டு ஆண்டுகளுக்கு முன் மதுரை நகர் போலீசிற்கான பிரத்யேக பேஸ்புக் முகவரி துவங்கப்பட்டது. போலீசாரின் செயல்பாடுகள், பணிகள், கமிஷனரின் அறிவுரை போன்றவை தினமும் 'அப்டேட்' செய்யப்படுகிறது.

இந்தாண்டில் நேற்றுமுன்தினம் வரை பொதுமக்களிடம் இருந்து 254 புகார்கள் பேஸ்புக் மூலம் பெறப்பட்டுள்ளன.



கமிஷனரின் பிரத்யேக பேஸ்புக்கில் இந்த வாரம் 6,916 பேர் அவரது செயல்பாடுகளை 'லைக்' செய்துள்ளனர்.இதேபோல், போலீசாரின் கைது நடவடிக்கைகள் பேஸ்புக் மூலம் இந்தாண்டு 18,493 பேரிடம் சென்று அடைந்துஉள்ளது. ஆயுதங்களுடன் வழிப்பறி செய்வதை தடுக்க

24 மணி நேரமும் போலீசார் ரோந்து செல்லும் தகவலை அதிகபட்சமாக 21,796 பேர் அறிந்துள்ளனர். போலீசாரின் ஜூன் மாத புலன் விசாரணை குறித்த தகவல்களை 168 பேர் 'ஷேர்' செய்துள்ளனர்.கடந்தாண்டு துவக்கப்பட்ட போலீஸ் வாட்ஸ் ஆப் மூலம் இந்தாண்டு 2,764 பேர் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், எஸ்.ஓ.எஸ்., என்ற அலைபேசி ஆப்சை பதிவிறக்கம்

செய்து 2,459 பேர் பதிவு செய்துள்ளனர். அதில் 324 பேர் புகார் தெரிவித்துள்ளனர். தவிர, இமெயில் மூலம் 338 பேர் புகார் தெரிவித்துள்ளனர்.



போலீஸ் அதிகாரி கூறுகையில், ''காலத்திற்கேற்ப புகார் தெரிவிக்கும் முறையும் நவீனமாக்கப்பட்டுள்ளது. புகார் தெரிவித்த சில நிமிடங்களில் சம்பந்தப்பட்ட இடத்திற்கு போலீசார் சென்று நடவடிக்கை எடுப்பதால், பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது,'' என்றார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...