தகவல்களைக் கொடுங்கள்: நெருக்கும் சி.பி.எஸ்.இ. - மறுக்கும் பள்ளிகள்!!

தனியார் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் குறித்து பொது மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கட்டணம் பற்றிய தகவல்களை ஆன்லைனில் வெளிப்படுத்துமாறு மத்திய கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) பள்ளிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. 13௦ தலைப்பின் கீழ் பள்ளிக்கட்டணம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட தகவல்களை நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளும்
கண்டிப்பாக தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஆனால், சி.பி.எஸ்.இ. கேட்பதுபோல் பள்ளிகளின் தனிப்பட்ட விவரங்களை தெரிவிக்க முடியாது என பெரும்பான்மையான பள்ளி நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

பள்ளியின் உள்கட்டமைப்பு, ஊழியர்கள், நிதி மற்றும் பிற விவரங்களை ஆறு பிரிவுகளின் கீழ் தெரிவிக்க வேண்டும் என்று கடந்த அக்டோபர் 25ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் மத்திய கல்வி வாரியம் கூறியிருந்தது. ஆனால், ஒவ்வொரு பள்ளியும் அதன் வலைதளங்களில் கட்டணம், வைஃபை வேகம், மாணவர்கள் சேர்க்கை, இருப்பு நிதி போன்ற விவரங்களை தெளிவாக பதிவு செய்யாத நிலையில், எல்லா விவரங்களையும் நவம்பர் இறுதிக்குள் தெரிவிக்கும்படி கூறியுள்ளது.

மத்திய கல்வி வாரியத்தின் தலைவர் ராஜேஷ் குமார் சதுர்வேதி, ஜுன் மாதத்துக்குள் பள்ளிகள் தங்களுடைய விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ஆனால், சில பள்ளிகள் இதுவரை இணையதளத்தைக் கூட உருவாக்காமல் உள்ளன. அப்படி தகவல்களை வெளியிடாத பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை தேர்வெழுத அனுமதிக்க முடியாது என மத்திய கல்வி வாரியம் எச்சரித்துள்ளது. இதுபற்றிய விவரங்களை அக்டோபர் இறுதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கூறிய நிலையில், தற்போது கீழே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும் இணைத்து இணையதளத்தில் வெளியிட வேண்டும் கூறியுள்ளது.

பள்ளி கட்டடங்களின் எண்ணிக்கை, கட்டுமானம், பள்ளி அமைந்திருக்கும் இடம், குடிநீர் மற்றும் சுகாதாரம், தீ அணைப்பு உபகரணங்கள் உள்ளதா? பள்ளியின் பரப்பளவு போன்ற கூடுதல் விவரங்களை நவம்பர் இறுதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த விவரங்களை வெளியிடும் போதுதான் பள்ளிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதும், பொதுமக்களும் பெற்றோர்களும் பள்ளிகளுக்குச் சரியான முறையில்தான் கட்டணம் செலுத்துகிறார்களா என்பதும் தெரியவரும் என்று சதுர்வேதி

கூறியுள்ளார். இவ்வாறு அனைத்து பள்ளிகளும் பள்ளிகள் பற்றிய தகவல்களை வெளியிடுவது அதன் வெளிப்படைத்தன்மையை நிரூபிக்கும் வகையில் இருக்கும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...