பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதற்கு உரிய தண்டனைகள் வழங்கப்பட்டாலும் பாலியல் அத்துமீறல்கள் குறையவில்லை. இந்நிலையில், பாலியல் வழக்கில் சிக்கிய ஐந்து பேருக்கு மும்பை உயர்நீதிமன்றம் வித்தியாசமாக தீர்ப்பு வழங்கியுள்ளது. மும்பை, பத்லாப்பூரைச் சேர்ந்த 17 வயது மாணவிக்கு ஐந்து கல்லூரி
மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதனையடுத்து, அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தது. இதற்கிடையில், வழக்கு தொடுத்தவர்களும், வழக்கில் சிக்கியவர்களும் சமாதானமாகப் போக முடிவு செய்தனர். இந்த வழக்கிற்காக நீதிமன்றத்துக்கும் காவல் நிலையத்திற்கு அலைவதற்கு தங்கள் குடும்பத்தினர் விரும்பவில்லை என்றுபாதிக்கப்பட்ட மாணவியின் தாய் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் அபய் ஓகா மற்றும் எ.எ.சையது ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. மாணவர்கள் செய்த குற்றம் சமூகத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என கருத முடியாது என்றனர் நீதிபதிகள்.
மாணவர்களின் வயது, செய்த தவறுக்காக வருந்தியது போன்றவைகளை அடிப்படையாக வைத்து குற்றவியல் சட்டப் பிரிவு S.482-ன்படி மாணவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், ஐந்து மாணவர்கள் தலா 50 ஆயிரம் ரூபாயை உயர்நீதிமன்ற பதிவாளரிடம் அபராதமாக செலுத்த வேண்டும். அந்த தொகை மாநில சட்ட உதவி ஆணையத்திடம் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
மேலும், ஐந்து மாணவர்களும் பத்லாப்பூர் நகராட்சிக்குட்பட்ட குல்கான் என்கிற இடத்தில் நவம்பர் மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரண்டு மணிநேரம் துப்புரவுப்
பணி செய்து சமூகத்திற்கு சேவையாற்ற வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பு பல தரப்பிலும் பாராட்டுக்களுக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகி வருகிறது.