ஒருநாள் மழைக்கு இடிந்து விழுந்த அரசு பள்ளி!!

ஒருநாள் மழைக்கே விடுமுறை அளிக்கப்பட்ட அரசு பள்ளியால் அரியலூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல அரசு பள்ளி கட்டடங்கள் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளன. இன்னும் சில பள்ளிகளில் வகுப்பறைகள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் அரியலூர் மாவட்டம்

செந்துறை பகுதியில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மழைநீர் தேங்கியதால், விடுமுறை அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் இன்னும் சில தினங்களில் பருவமழை தொடங்க இருக்கிறது. கடந்த சில தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் அரியலூர் மாவட்டம் செந்துறையில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியின் சுற்றுச்சுவரில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மாணவிகள், பள்ளி வளாகத்தில் தண்ணீர் சூழ்ந்துள்ளதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து பள்ளி தலைமையாசிரியர், 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவிகளைத் தவிர மற்ற வகுப்பு மாணவிகளுக்கு விடுமுறை அளிப்பதாகக் கூறியுள்ளார். மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வருவதால் விடுமுறை அளிக்கப்பட்டது. இது தற்காலிக தீர்வாக இருந்தாலும், எங்களின் கல்வி பாதிக்கப்படுவதை கவனத்தில் கொண்டு பள்ளியை சீரமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மாவட்ட ஆட்சியரிடம் மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழகத்தில், அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் பல அரசு பள்ளிகள் கடந்த மூன்ற ஆண்டுகளில் மூடப்பட்டுள்ளன. பல பள்ளிகள் கட்டட வகுப்பறை இல்லாமல் செயல்பட்டு வருகிறது. எனவே பருவமழை தொடங்குவதற்கு முன்பாக மாணவர்களின் கல்வியையும் பாதுகாப்பையும் கருத்தில்கொண்டு தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் பாதுகாப்பாக செயல்படுகிறதா என்பது குறித்து தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என்று பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...