சென்னை,தங்களது மருத்துவ பணியில் போலீசார் தலையிடக்கூடாது என்று பாரம்பரிய மருத்துவர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.போலீசுக்கு தடை
டெல்லியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும், இந்திய பிரைவேட் மெடிக்கல் பிராக்டிஷனர்ஸ்
அசோசியேசன் என்ற சங்கத்தின் சார்பில் ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடரப்பட்டது. அதில், ‘எங்கள் சங்க உறுப்பினர்கள் பாரம்பரிய மருத்துவத்தில் மிகுந்த அனுபவத்துடன் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். மாற்றுமுறை வைத்தியத்தில் சான்றிதழ்களும் பெற்றுள்ளனர். எனவே, சங்க உறுப்பினர்கள் மீது மருத்துவ கவுன்சில் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கூடாது என்று போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். தடையும் விதிக்கவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ‘மனுதாரர் சங்கத்தின் உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு இடைக்கால தடை விதித்து’ 2006–ம் ஆண்டு உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணையை தள்ளிவைத்திருந்தார்.தலைமை நீதிபதி உத்தரவு
இதன்படி இந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், நீண்ட காலமாக நிலுவையில் இருக்கும் வழக்குகளுக்கு முன்னுரிமை அளித்து விசாரிக்க வேண்டும் என்று அனைத்து நீதிபதிகளுக்கும், ஐகோர்ட்டு தலைமை நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.இதன்படி, இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:–பாரம்பரிய மருத்துவத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள், ஒரு சங்கத்தை தொடங்கி, இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். 2006–ம் ஆண்டு முதல் இந்த வழக்கு ஐகோர்ட்டு ஆவண அறையில் கிடந்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது தூசி தட்டப்பட்டு விசாரணைக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுலுக்கு நன்றி சொல்ல வேண்டும்.பிரச்சினை எழுகிறது
பொதுவாக எந்த வகையான மருத்துவத்தின் கீழ் தகுதி பெற்றார்களோ, அந்த வகையான மருத்துவ பணி செய்வதால் எந்த பிரச்சினையும் ஏற்படுவதில்லை. மாறாக, ஆங்கில மருத்துவத்தில் தகுதியே இல்லாதவர்கள் தங்களை டாக்டர்கள் என்று கூறி கொண்டு ஆங்கில மருத்துவ முறையின் கீழ் சிகிச்சை வழங்கும்போது தான் பிரச்சினை எழுகிறது. இதுபோன்ற சூழ்நிலைகளில் போலீசாரின் தலையீடு மிக முக்கியமானதாக அமைகிறது. எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.