இரண்டரை லட்சத்துக்குமேல் வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு வருமான வரித்துறை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வருகிறது. இதனால், மத்திய அரசின் உள்நோக்கத்தை சந்தேகிக்கவேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
பொதுவாக சிறு நகரங்களிலும், கிராமங்களிலும், சிறுவாட்டு பணம், சீட்டுப் பணம், கைமாற்றாக பணத்தைக் கொடுத்துவைப்பது, (நம்பிக்கையின்பேரில் வட்டிக்கோ, வட்டி இல்லாமலோ) மொய் எழுதுவது என்று, லட்சக்கணக்கில் பணத்தைச் சேமிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அனேகம். இப்படி சிறுகச்சிறுக சேர்த்த பணத்துக்கு இப்போது மத்திய அரசு மொத்தமாக உலைவைத்துவிட்டது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்த அன்று அவர், மிகத் தெளிவாக இப்படிக் கூறினார்: ‘உங்கள் பணத்தை வங்கியில் செலுத்த எந்த உச்சவரம்பும் இல்லை. உங்கள் பணம் உங்களுடையதுதான்’ என்று, அழுத்தம் திருத்தமாகக் கூறினார். இதை நம்பி, இதன் பின்னால் வரவிருக்கும் சிக்கலை உணராமல் வங்கியில் தங்கள் சேமிப்புப் பணத்தை செலுத்திய அப்பாவிகள் அனேகம்பேர் உள்ளனர். அதன்பிறகு, மத்திய அரசு திடீரென்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இரண்டரை லட்சத்துக்குமேல் வங்கியில் செலுத்துபவர்களுக்கு வரிவிதிப்பும், 200 சதவிகித அபராதமும் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கறுப்புப் பணத்தை பதுக்கியவர்கள் அஞ்சினார்களோ இல்லையோ, மோடியின் பேச்சை நம்பி தன் சேமிப்பை வங்கியில் செலுத்திய அப்பாவி பொதுமக்கள் நடுநடுங்கிப் போய்விட்டார்கள். காரணம், அவர்களில் பலருக்கு வரிவிதிப்பு என்று ஒன்று உள்ளது என்பதே தெரியாது. வருமானத்தை தணிக்கைசெய்ய ஆடிட்டர் என்று ஒருவர் இருக்கிறார் என்பதும் அவர்களுக்குத் தெரியாது. இந்நிலையில்தான், விவரம் புரியாமல் தங்கள் சேமிப்பை வங்கியில் செலுத்தியவர்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருகிறது. அதில், ‘குறிப்பிட்ட தேதியில் நீங்கள் இவ்வளவு தொகை டெபாசிட் செய்துள்ளீர்கள். அந்தப் பணம் வந்ததற்கான ஆதாரம், கடந்த 2 ஆண்டுகளில் தாக்கல்செய்த வருமான வரிக் கணக்குகள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அலுவலகத்துக்கு நேரில் வரவேண்டும்’ என குறிப்பிட்டுள்ளது. தற்போது இத்தகைய நோட்டீஸ்கள், வருமான வரித்துறையினரால் அனைவருக்கும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. சிக்கிம் மாநிலத்தைச் சேர்ந்த சீதாராம் என்ற சிறு நிறுவனம் சார்பில் 4.5 லட்ச ரூபாய் பணம் ஸ்டேட் பேங்க் ஆஃப் சிக்கிமில் செலுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விளக்கம் கேட்டு அந்த நிறுவனத்துக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்த நிறுவனம் வரும் 25ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 2.5 லட்சம் ரூபாய்க்கு அதிமாக செலுத்தப்படும் பணம் குறித்து அளிக்கப்படும் விளக்கம் திருப்திகரமாக இருந்தால் நடவடிக்கைகள் தவிர்க்கப்படும். மாறாக, விதிமீறல்கள் இருந்தால் 200 சதவிகிதம் அபராதமும் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மோடி அறிவித்த நாளிலிருந்து இன்று வரை வங்கிகளுக்கு அலைந்து திரிந்து அல்லல்படும் அப்பாவி மக்கள் இனி, வருமான வரித்துறை அலுவலகத்துக்கும் அலைய நேரிடலாம். இந்தப் பிரச்னையை ஆடிட்டரின் துணைகொண்டு எதிர்கொள்ளத் தெரியாதவர்கள் நடவடிக்கைக்கும் ஆளாகலாம். ஆக, மத்திய அரசு அப்பாவி பொதுமக்களின் குரல்வளையை மெல்ல மெல்ல நெருக்கத் தொடங்கிவிட்டது என்பது மட்டும் உண்மை.