எங்களுக்கு ஏடிஎம் மையங்களோ, வங்கிகளோ தேவையில்லை’ என ஒரு கிராமம் இயங்கி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 8 ஆம் தேதி இரவு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்ததைத் தொடர்ந்து, மக்கள் வங்கிகள் மற்றும் ஏடிஎம் களில் குவிந்து வருகின்றனர்.
குஜராத் சபர்கந்தா மாவட்டத்தில் அகோதாரா என்னும் கிராமம் உள்ளது. இந்த கிராம மக்கள் அனைவரும் பணத்தை எடுக்க ஏடிஎம் முன்போ, வங்கியின் முன்போ காத்துக்கிடக்கவில்லை. அனைவரும் வழக்கம் போல் தங்களுடைய தினசரி பணிகளை செய்த வண்ணம் உள்ளனர்.
இதனால், அகோதாரா கிராமத்தில் உள்ள ஒரே ஒரு ஏடிஎம்-க்கும் மதிப்பில்லாமல் போய்விட்டது. இங்கு வசிக்கும் 1500க்கும் மேற்பட்ட மக்கள், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலமாகவே தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்கின்றனர். டீக்கடை முதல் மளிகைக்கடை வரை ஆன்லைன் மூலமாகவே பணம் செலுத்துகின்றனர். இதனால், இந்த கிராமத்தை சேர்ந்த மக்களுக்கு மோடியின் அறிவிப்பு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
மாநில அரசின் உதவியுடன் இந்த ஊரில் ஐசிஐசிஐ வங்கி திறக்கப்பட்டது. அதன் மூலம் அந்த கிராமத்தை சேர்ந்த 1200 பேருக்கு வங்கிக்கணக்கும், ஒவ்வொருவருக்கும் ஆன்லைன் கணக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் எஸ்எம்எஸ் அனுப்பத் தெரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கிராம மக்கள் ஏடிஎம் பயன்படுத்தாததால், பக்கத்து கிராமத்தில் இருக்கும் மக்கள் இங்குள்ள ஏடிஎம்மில் பணம் எடுத்து செல்வது அதிகரித்துள்ளது.
இப்போதைய நிலவரப்படி நாட்டு மக்கள் அனைவரும் கையில் பணம் இருந்தும் அதை எடுக்க முடியாமலும் மாற்ற முடியாமலும் திணறி வருகின்றனர். ஆனால், இந்த கிராம மக்கள் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல் அவர்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்துவருகின்றனர். மேலும், இந்தியாவின் முதல் டிஜிட்டல் கிராமம் அகோதரா என்பது குறிப்பிடத்தக்கது.