கறுப்பு பணத்தை வெளிக்கொணரும் எண்ணத்தோடு கொண்டு வரப்பட்ட 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற திட்டத்தை நடைமுறைபடுத்துவதில் மத்திய அரசுக்கு சரியாகத் திட்டமிடவில்லை என்று கொல்கத்தா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 8 ஆம் தேதி இரவு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். இதனையடுத்து, மக்கள் வங்கி, ஏடிஎம் மையம் மற்றும் அஞ்சலகங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இதுதவிர, பணம் அதிகமாக இருக்கும் வங்கிகளைத் தேடித்தேடி கண்டுபிடிக்கின்றனர். மத்திய அரசின் இந்த முடிவு பல பாமர மக்களை அலைக் கழித்து வருகின்றது. முதியவர்களும், குழந்தை வைத்திருப்பவர்களும் தங்களது பணத்தை மாற்றுவதற்காக வெயில் என்றும் பாராமல் கால் கடுக்க நீண்ட வரிசையில் நின்று வருகின்றனர்.
இந்நிலையில், ரூபாயுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக கொல்கத்தா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.அதில், நீதிபதிகள், ரூபாய் நோட்டுக்கு தடை விதிக்கும் நடவடிக்கையை முறையாக அமல்படுத்துவதில் மத்திய அரசு சரியாகத் திட்டமிடவில்லை. மேலும், அறிவிப்பு வெளியிட்ட நாளிலிருந்து நாள்தோறும் ஒரு புதிய திட்டத்தையும், விதிமுறைகளையும் கொண்டு வருகின்றனர் என்று மத்திய அரசை விமர்சனம் செய்துள்ளது.
இதுமட்டுமல்லாமல், பணம் மாற்ற வரும் மக்களிடம் வங்கி ஊழியர்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கின்றனர். இதில், அரசின் கொள்கையில் மாற்றம் கொண்டு வர நீதிமன்றத்தால் முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசும் தினந்தோறும் விதிமுறைகளை மாற்றி வருகின்றது. இதனால்,ஏழை, நடுத்தர மக்களை தவிர பெரும் பணக்காரர்கள் கஷ்டப்படவில்லை. அரசின் திட்டத்தால் மக்களின் வாழ்க்கை முறை மாறும். ஆனால் வாழ்க்கையையே நடத்த முடியாத அளவுக்கு மாறும் என்று எதிர்பார்க்கவில்லை.