குழப்பும் எஸ்பிஐ வங்கி அறிவிப்பு – திண்டாடும் மக்கள்!!!

மக்கள் பணத்திற்காக கடந்த பத்து நாட்களாக வங்கிகளுக்கும் ஏடிஎம் மையங்களுக்கும் அலைந்துகொண்டு இருக்கின்ற்னர். இநிலையில் நேற்று பாரத ஸ்டேட் வங்கி, பெட்ரோல் பங்கில் டெபிட் கார்ட்டை ஸ்வைப் செய்து ரூபாய் 2,000 வரை பணத்தை பெற்று கொள்ளலாம் என அறிவித்தது. இதனையடுத்து, மக்கள் அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும் படை எடுத்து சென்றனர். ஆனால், ஏமாற்றத்தை

மட்டும் சந்தித்து வந்தனர். அதனால், எந்த பெட்ரோல் பங்குகளில் பணம் எடுக்கலாம் என்பதை தெளிவாக கூற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மோடி அறிவிப்பை அடுத்து மக்கள் படும் கஷ்டத்துக்கு எல்லை இல்லாமல் போய்விட்டது. பஞ்சத்தில் கூட பார்க்காத பணக் கஷ்டத்தை மக்கள் மோடியின் அறிவிப்புக்குப் பிறகு சந்தித்து வருகின்றனர். அதனால் மக்களின் கஷ்டத்தை குறைக்கும் வகையில், தனி நபர் பெட்ரோல் பங்க் மூலமாக டெபிட் கார்டுகளைப் ஸ்வைப் செய்து நாளொன்றுக்கு ரூ. 2000 பெற்றுக் கொள்ளலாம் என பாரத ஸ்டேட் வங்கி நேற்று அறிவித்தது.

இதற்காக பாரத ஸ்டேட் வங்கி இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் ஆகிய மூன்று எண்ணெய் நிறுவனங்களுடன் கலந்துரையாடிய பின் உடன்படிக்கை செய்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் இந்த மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு சொந்தமான, பாரத ஸ்டேட் வங்கியின் ஸ்வைப்பிங் மெஷின் வசதிகொண்ட 2500 பெட்ரோல் பங்குகளில், பொதுமக்கள் தங்கள் டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணம் பெற்றுக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

இதை நம்பி மக்கள் வங்கி, ஏடிஎம்-களை ஒதுக்கி விட்டு அனைத்து பெட்ரோல் பங்கிலும் பொறுமையோடு வரிசையில் காத்திருந்தனர். இதனால், பெட்ரோல் பங்கிலும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. ஆனால், எந்த பெட்ரோல் பங்கில் பணம் எடுக்கலாம் என்பதை தெளிவாக தெரிவிக்காததால் மக்கள் ஒவ்வொரு பெட்ரோல் பங்க்கும் அலைந்து வருகின்றனர்.

அதனால், எந்த பெட்ரோல் பங்கில் பணம் எடுக்க முடியும் என்பதை தெரிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளனர்.

கடந்த 10 நாட்களாக பொதுமக்கள் படும் துன்பத்தைக் குறைக்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே உண்மை. தினம் ஒரு அறிவிப்பு, உடனே அதில் மாற்றம் என மக்கள் குழம்பிப்போய் உள்ளனர். இந்நிலை இன்னும் சிலநாட்கள் நீடித்தால், ஆங்காங்கே போராட்டம் நடக்கலாம். அதற்கு முன்பு, மத்திய அரசு எல்லாருக்கும் எல்லா வங்கிகளிலும் பணம் கிடைக்க வகை செய்ய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...