ரிசர்வ் வங்கி மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் விழுப்புரத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்துள்ள நிலையில், பழைய நோட்டுகளைக் கொடுத்து புதிய நோட்டுகளை பெற்றுக் கொள்வதில் பல சிரமங்கள் எழுந்துள்ளன. வங்கிகள், ஏடிஎம் மையங்களில் பணம்
நிரப்புவதில்லை. காரணம், புதிய ரூபாய் 2000 நோட்டு ஏடிஎம் மெஷினில் பொருந்தவில்லை என்கிறார்கள். வங்கி கவுண்ட்டர்களில் மக்கள் கேட்கும் தொகையை வழங்குவதில்லை. கேட்டால், பணமில்லை என்கிறார்கள். கிராமப்புறங்களிலோ நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. கிராமப்புற வங்கிகளில் அதிருப்தியடைந்த பலர் தங்கள் வங்கிக்கணக்குகளையே மூடச் சொல்லி வாக்குவாதங்களில் ஈடுபடும் நிலையில், கூட்டுறவு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி பணம் அனுப்பாத நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் தலையிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
விழுப்புரத்தைச் சேர்ந்த விவசாயியான ராமமூர்த்தி என்பவர் கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்திருந்தார். ஆனால், தன் வங்கிக்கணக்கில் உள்ள பணத்தை தன்னால் எடுக்க முடியவில்லை என்றும், கேட்டால் ரிசர்வ் வங்கி பணம் அனுப்பவில்லை வந்த பின்பு தருகிறோம் என்றும் கூறுகிறார்கள். தான் கூட்டுறவு வங்கியில் சந்திக்கும் இந்தப் பிரச்னையையே ஒரு மனுவாக தயாரித்து வழக்காக தாக்கல் செய்துள்ளார் ராமமூர்த்தி. அவர் தாக்கல் செய்துள்ள இந்த மனு இன்று மதியத்துக்கு மேல் நீதிபதி கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வருகிறது.