அனைவருக்கும் இலவச கல்வி, மருத்துவம்: கியூபாவின் சாதனை நாயகன் ஃபிடல் காஸ்ட்ரோ!!!

 கியூபாவின் முன்னாள் அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ அந்நாட்டு தலைநகர் ஹவானாவில் இன்று காலமானார். அவருக்கு வயது 90.

49 ஆண்டுகள் தொடர்ந்து கியூபாவின் அதிபர் பதவியை வகித்தவர். கம்யூனிஸ சிந்தனையாளரும், பிறவி
புரட்சியாளருமாக விளங்கிய ஃபிடல் காஸ்ட்ரோ, தன் நாட்டு மக்கள் அனைவருக்கும் கல்வியையும், மருத்துவத்தையும் இலவசமாக வழங்கினார்.

இதன் மூலம் கியூபாவில் 2010ம் ஆண்டிலேயே படித்தவர்களின் சதவீதம் 99.8 என்று பதிவாகியுள்ளது. கியூபாவில் தனியார் பள்ளிகளோ, கல்லூரிகளோ அனுமதிக்கப்படவில்லை.

நாடு முழுவதும் அனைத்து மாணாக்கருக்கும் ஒரே சீருடை, 15 வயது வரை கட்டாய மற்றும் இலவசக் கல்வி, 12 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நடைமுறையை ஏற்படுத்தினார்.

தனியார் கல்வி நிறுவனங்களைப் போல கியூபாவில் தனியார் மருத்துவமனைகளே கிடையாது. அது போல, எய்ட்ஸ் நோயாளிகள் குறைவாக இருப்பதும், பிரசவத்தின் போது தாய் - சேய் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதும் கியூபாவில்தான் என்றால் அது ஃபிடல் காஸ்ட்ரோவின் சாதனைகளில் ஒரு மைல்கல் என்றே சொல்ல வேண்டும்.



அமெரிக்காவின் ஒரு மாநிலமாக இருந்திருக்க வேண்டிய கியூபாவை, தனது புரட்சிப் போராட்டத்தினால், கம்யூனிஸ்ட் நாடாக மாற்றினால் ஃபிடல் காஸ்ட்ரோ.



சே குவேராவுடன் இணைந்து சுமார் 5 ஆண்டுகள் போராடி, 1959ம் ஆண்டு கியூபாவை தனி நாடாக அறிவித்தார் காஸ்ட்ரோ. அதன்பிறகும் அந்நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் நீடித்தது. பொருளாதார நெருக்கடி உட்பட ஏராளமான நெருக்கடிகளை அமெரிக்கா கொடுத்த போதும், எதற்கும் அடிபணியாமல், அமெரிக்காவுக்கே சிம்ம சொப்பனமாக விளங்கினார் ஃபிடல் காஸ்ட்ரோ.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...