மதிப்பெண்ணை தாண்டி படியுங்கள்' துணைவேந்தர் அறிவுரை!!!

வகுப்பறையில், மதிப்பெண்ணை தாண்டி, வாழ்க்கையில் வெற்றி பெற கற்றுக் கொள்ளுங்கள்,'' என, பட்டதாரிகளுக்கு, ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர், எஸ்.தங்கசாமி அறிவுறுத்தினார்.

சென்னை, லேடி வெலிங்டன் அட்வான்ஸ்ட் அரசு கல்வியியல்
கல்லுாரி, பட்டமளிப்பு விழா, நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் தில்லை நாயகி தலைமை வகித்தார். எம்.பில்., படிப்பில், நான்கு; எம்.எட்., படிப்பில், 35; பி.எட்., படிப்பில், 203 பேர் என, 242 மாணவியரும், முதல் வகுப்பில் தேர்ச்சியுடன் பட்டம் பெற்றனர்.

பட்டங்களை வழங்கி, தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை துணைவேந்தர் எஸ்.தங்கசாமி பேசியதாவது:

பட்டம் பெற்றோர், வகுப்பறையில், மதிப்பெண் அடிப்படையில் வெற்றி பெற்று விட்டீர்கள். அடுத்து, வாழ்க்கையில் வெற்றி பெற கற்றுக் கொள்ளுங்கள். மாவட்ட கலெக்டராக உள்ள பலரிடம் நாங்கள் ஆய்வு செய்தோம். அவர்கள், சராசரியை விட அதிக மதிப்பெண் பெற்றவர்கள் என்றனர்.

அதிக அளவுக்கு, நல்ல நண்பர்களிடம் பழகுங்கள். அதனால் தான், நட்புக்காக, 50 குறள்களை திருவள்ளுவர் எழுதியுள்ளார்.

இன்றைய கல்வி முறையும், பாடத்திட்டமும், மதிப்பெண்களை தாண்டிய விஷயங்களை கற்று கொடுக்கவில்லை. அந்த விஷயங்களை பட்டதாரிகள் அறிந்து கொள்ள வேண்டும்.

கோபம், மகிழ்ச்சி, அதிர்ச்சி என, உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தோற்றால் உடனே எழவும், அழுதால் உடனே சிரிக்கவும் வேண்டும். எனவே, பாட புத்தகத்தை தாண்டிய, புத்தகங்களை படியுங்கள்.

பள்ளிகளில் மாணவர்களுக்கு பிடித்த ஆசிரியையாக பணியாற்றுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...