யோகா பயிற்சி கட்டாயமா?; சுப்ரீம் கோர்ட்டில் மனு தள்ளுபடி!!

ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும், அனைத்து மாணவர்களுக்கும், யோகாவை கட்டாய பாடமாக்க வலியுறுத்தும், பொதுநலன் மனுவை, சுப்ரீம் கோர்ட், நேற்று தள்ளுபடி செய்தது.


டில்லி மாநில, பா.ஜ., தலைவர்களில் ஒருவரான அஸ்வினி உபாத்யாய், நாடு முழுவதும், ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், யோகாவை கட்டாய பாடமாக்க வேண்டும் எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில், பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.

தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, இந்த மனுவை, நேற்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதே போன்ற கோரிக்கையை வலியுறுத்தி, டில்லி ஐகோர்ட்டில், 29ல், மற்றொரு வழக்கு விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கில் சேர்ந்து கொள்ள, அஸ்வினி குமாருக்கு, சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...