கடந்த 8ஆம் தேதி நள்ளிரவோடு ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர். மூன்றாவது நாளாக பழைய நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்ளும் நடைமுறை தொடரும் நிலையில், கால அவகாசம் எதுவும் அளிக்காமல் திடீரென
அறிவிக்கப்பட்டதற்கு எதிராக நாடு முழுக்க பல நீதிமன்றங்களில் வழக்குத் தொடரப்பட்டது. உச்சநீதிமன்ற வழக்கறிஞர் சங்கம்லால் பாண்டே உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்து அதை அவசர வழக்காக விசாரிக்கக் கோரியிருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “திடீரென ரூபாய் 500, 1000 நோட்டுகளை தடை செய்வது ‘துக்ளக் ராஜ்ஜியம்’ போல் உள்ளது. ஏழை இந்திய மக்களுக்கு எந்த ஒரு சந்தர்ப்பத்தையும், அவகாசத்தையும் வழங்காமல் சட்ட விரோதமாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் மருத்துவம், கல்வி, திருமணச் சடங்கு, வேளாண்மை போன்ற அதிமுக்கிய காரியங்கள் பற்றி சிந்திக்காமல் இதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்து கொள்ள போதிய அவகாசம் அளிக்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், நவம்பர் 9-11 தேதிகளில் நடைபெறவிருந்த திருமணங்கள் பல ரத்து செய்யப்பட்டுள்ளன. பெரிய அளவில் மக்கள் அவதியுறுகின்றனர். எனவே, அரசு ரூபாய் 500, 1000 நோட்டுகள் செல்லாது என்ற அரசின் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும்” என்று கோரியிருந்தார். ஆனால், இந்த வழக்கு நீதிபதி அனில் தவே முன்பு விசாரணைக்கு வந்தபோது இந்த மனுவை அவசர மனுவாக விசாரிக்க முடியாது என்று வழக்கை 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இதற்கிடையில், மத்திய அரசு கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிக்கும்போது, தங்களது வாதத்தை கேட்காமல் எந்தவித இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்கக்கூடாது என்று அந்த கேவியட் மனுவில் கூறியிருந்த நிலையில், ரூபாய் நோட்டு அறிவிப்பு தொடர்பாக பல்வேறு உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நேற்று முன்தினம் ஒரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. நேற்று அலகாபாத், பெங்களூரு உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டன. ரூபாய் நோட்டு அறிவிப்பு தொடர்பான வழக்கு 15ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளதால் உயர்நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.