கோயம்பேடு மார்க்கெட்டில் 1996ஆம் ஆண்டு முதல் சொத்து வரி செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்கும்படி சென்னை மாநகராட்சிக்கு, உயர்நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார். இவ்வழக்கு தொடர்பாக சென்னை, உயர்நீதிமன்றத்தில் கோயம்பேடு வணிக வளாகத்தில் பூக்கடை
வைத்திருக்கும் இருவர் தாக்கல் செய்த மனுவில், ‘சென்னை கோயம்பேடு சந்தையில், கடந்த 1996ஆம் ஆண்டு, எங்கள் தந்தைக்கு கடை ஒன்று ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்தக்கடைக்கு ஆண்டுதோறும் பராமரிப்பு கட்டணத்தை செலுத்தி வந்தோம். இந்நிலையில், எங்கள் தந்தையின் மறைவுக்கு பின்னர், இந்த கடை எங்களது பெயருக்குப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது. பின்னரும் பராமரிப்பு கட்டணத்தை மாதந்தோறும் செலுத்தி வருகிறோம். இந்நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு மாநகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது. அதில், கடந்த 1996ஆம் ஆண்டு முதல் சொத்து வரி செலுத்தவில்லை. சொத்து வரியாக ரூ.23,000 செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி ஆணையரிடம் மனு கொடுத்தோம். இருப்பினும் 1996ஆம் ஆண்டு முதல் கணக்கிட்டு ரூ.21,000 வரியை 15 நாள்களுக்குள் செலுத்த வேண்டும் என்று மீண்டும் மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. இவ்வாறு உத்தரவு பிறப்பிக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அதிகாரம் இல்லை. கடந்த 1996ஆம் ஆண்டு முதல் சொத்து வரியை கேட்பதற்கு மாநகராட்சிக்கு உரிமையும் இல்லை. எனவே அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’ என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி என்.கிருபாகரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம், ‘கடை ஒதுக்கப்பட்ட நாளில் இருந்து சொத்து வரி செலுத்தாமல் இழுத்தடித்துள்ளீர்கள்?’ என்று சொன்னவர், தொடர்ந்து மாநகராட்சி நிர்வாக தரப்பு வழக்கறிஞரிடம், “கோயம்பேடு வணிக வளாகத்தில் மொத்தம் எவ்வளவு கடைகள் உள்ளன? அதில் எவ்வளவு கடை உரிமையாளர்கள் சொத்து வரி செலுத்தாமல் உள்ளனர்? என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
அதற்கு, “வணிக வளாகத்தில் மொத்தம் 2,080 கடைகள் உள்ளன. அதில் சுமார் 600க்கும் குறைவான கடைகாரர்கள் மட்டுமே சொத்து வரியை செலுத்தி இருக்கின்றனர். மீதமுள்ள கடைக்காரர்கள் கடை ஒதுக்கப்பட்ட நாள் முதல், அதாவது 1996ஆம் ஆண்டு முதல் சொத்து வரியை செலுத்தாமல் உள்ளனர். வரியை வசூலிக்க அதிகாரிகள் சென்றால், அங்கு சட்ட ஒழுங்கு பிரச்னை எழுகிறது” என்று மாநகராட்சி தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து நீதிபதி கூறியது: “அரசுக்கு வர வேண்டிய வரி வருமானத்தை வசூலிக்காமல், 20 ஆண்டுகளாக அதிகாரிகள் அலட்சியமாக இருந்துள்ளனர். சொத்து வரி செலுத்தாத கடைக்காரர்களுக்கு அதனை செலுத்தும்படி நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அப்படியும் அவர்கள் வரியை செலுத்தவில்லை என்றால், காவல்துறை உதவியுடன் வரி செலுத்தாத கடைகளுக்கு ‘சீல்’ வைக்க வேண்டும்” என்று கூறிய நீதிபதி, “இந்த வழக்கில் விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும்” என்றார்.